இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் பல வருடங்களுக்குப் பின்பு தனது குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றியுள்ளது. இதேவேளையில் இன்போசிஸ் ஊழியர்களுக்காகச் செலவிடும் தொகை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது, இதை கட்டுக்குள் வைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இன்போசிஸ் இதுவரையில் தனது ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டை அரசு நிறுவனமான நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனி வாயிலாகவே அளித்து வந்த நிலையில் தற்போது தனியார் காப்பீடு நிறுவனமான கோடிஜிட் (GoDigit) உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாற்றத்தின் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 3.2 லட்சம் ஊழியர்களுக்கு இனி கோடிஜிட் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இதேபோல் இன்போசிஸ் தரப்பில் ஏன் நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனியை விடுத்து கோடிஜிட் தேர்வு செய்யப்பட்டது என்பதை விளக்கவில்லை.
கோடிஜிட் இந்திய நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனத்தில் கனடா நாட்டின் பெரும் முதலீட்டாளர் பிரேம் வாட்சா-வின் ஃபேர்பேக்ஸ் குழுமத்தின் முதலீட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஊழியர் நன்மை சேவைகளைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இன்போசிஸ் போன்ற நாட்டின் மிகப்பெரிய IT நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பெறுவது என்பதும கோடிஜிட்-க்கு ஜாக்பாட் போன்றது.
இன்போசிஸின் செலவுகள்:
இன்போசிஸ் நிறுவனம் ஊழியர் நன்மைக்காக செலவிடப்படும் தொகை 2025-ஆம் நிதியாண்டில் சுமார் 4 சதவீதம் உயர்ந்து ரூ.67,466 கோடியை எட்டியுள்ளன. இந்த செலவு அதிகரிப்பில் ஊழியர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பிற நன்மைகளுக்காகச் செலவிடப்பட்ட தொகையும் அடக்கம்.
இதேபோல் நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனி-யின் இன்சூரன்ஸ் பிராசஸ் நேரத்தை ஒப்பிடுகையில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வேகமாக உள்ளது, இதேபோல் விலையும் தனியார் நிறுவனத்தில் குறைவாக உள்ளது. இப்படியிருக்கையில் தான் இன்போசிஸ் தனது இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications