இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் non-executive சேர்மன் ஆக இருக்கும் நந்தன் நிலேகனி, நிறுவனத்தில் தனது பணியை முடிக்கும் போது, நிறுவனர் அல்லாத ஒருவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைப்பதாகக் கூறினார்.
என்னுடைய முக்கியமான பணிகளில் என்னுடைய இடத்தைப் பெறும் தகுதியான நபரை தானே கண்டுபிடிப்பது தான் என்றும், என்னுடைய மனதில் உள்ள பெரிய விஷயங்கள் என்று அவர் கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் 40 வருட வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்போசிஸ் நிறுவனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் சந்தித்துப் பேசினர். இந்தக் கூட்டத்தில் தான் நந்தன் நிலேகனி தன்னை ஒரு ஜோக்கர் என்றும், தனது கடைசி முக்கியப் பணிகள் குறித்தும் பேசினார்.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் இன்னும் இன்போசிஸ் நேரடி நிர்வாகப் பணியில் எஞ்சியிருக்கும் ஜோக்கர்களில் (நிறுவனர்கள்) கடைசியாகத் தான் இருப்பதாகக் கிண்டலாகக் கூறினார். மற்ற நிறுவனர்கள் அனைவரும் நிறுவனத்திலிருந்து விலகியதை குறித்துப் பேசினார்.
பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி
இன்போசிஸ் நிறுவனம் துவங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் இன்போசிஸ் நிறுவனர்கள் புதன்கிழமை பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள பெங்களூரு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.
நாராயண மூர்த்தி, நந்தன் நிலேகனி
இந்த நிகழ்ச்சியில் நாராயண மூர்த்தி, நந்தன் நிலேகனி, உட்பட அனைத்து நிறுவனர்கள் மற்றும் அவர்களது குடும்பம், தற்போது இன்போசிஸ் நிர்வாகத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் இருப்பர் அனைவரும் கலந்துகொண்டனர். 2022 ஜூலை மாதமே 40 ஆண்டு நிறைவடைந்ததை இன்போசிஸ் அறிவித்தாலும், இது மிகவும் ஸ்பெலான கெட்டுகெதர் ஆகப் பார்க்கப்படுகிறது.
நந்தன் நிலேகனி
இந்தக் கூட்டத்தில் நந்தன் நிலேகனி நான் எப்போதும் நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும், என்னுடைய பதவியைக் கட்டாயம் நிறுவனர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே அளிப்பேன் எனத் தெரிவித்தார். வேறு யாருக்காவது கொடுத்தால் கட்டாயம் அது வொர்க் அவுட் ஆகாது, இதில் இந்தப் பிளான் B-யும் இல்லை.
நாராயண மூர்த்தி விஷன்
எப்போது நிறுவனத்தை விட்டு வெளியேறுவார் எனக் கேட்கப்பட்டதற்கு, நாராயண மூர்த்தி-யின்
பார்வையை நிர்வாகத்தில் கொண்டு வரும் வரையில் தான் இருப்பேன் என்றும், கட்டாயம் அதைக் கொண்டு வரமால் விட மாட்டேன்.
50வது வருடம்
இதை இன்போசிஸ் 50வது வருடத்தில் சொல்ல முடியுமா..? அதுவரையில் நான் இருப்பேனா என்பது தெரியாது. ஆனால் இது இன்போசிஸ் நிறுவனத்தின் 7 நிறுவனர்கள் மத்தியிலும் மனதைக் கணமாக்கியது.
சேர்மன் பதவி
ஆனால் என்னுடைய சேர்மன் பதவியில் உட்கார சரியான நபர் அவர்களின் நாடு, பாரம்பரியம் அல்லது அவர்கள் யாருடைய பிள்ளைகள் என்பதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்பதைத் தெரிவாக இன்போசிஸ் எதிர்காலம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
7 பேர்
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மாபெரும் நிறுவனமான உருவாக்கியுள்ள இன்போசிஸ் நிறுவனத்தை என் ஆர் நாராயண மூர்த்தி, நந்தன் நிலேகனி, கிரிஸ் கோபாலகிருஷ்ணன், எஸ்டி ஷிபுலால், கே.தினேஷ், என்எஸ் ராகவன் மற்றும் அசோக் அரோரா ஆகிய 7 பேர் இணைந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவினார்.
சுதா மூர்த்தி டான்ஸ் வீடியோ
புதன்கிழமை பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி-யில் உள்ள பெங்களூரு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனர் நாராணயன மூர்த்தியின் காதல் மனைவி சுதா மூர்த்தி ஸ்ரேயா கோஷல் பாட்டுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications