இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இக்காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு சம்பளம் உயர்வில் தாமதம், வேரியபிள் பே குறைப்பு என பல பிரச்சனைகளில் எழுந்த நிலையில் 20000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பதாக அறிவித்தது பெரும் நம்மதியை கொடுத்துள்ளது.
இதேபோல் ஏஐ துறையில் அதிகப்படியான கவனத்தை செலுத்த இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தனது ஊழியர்களை ஏஐ துறையில் பயிற்சி அளிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் ஆஸ்திரேலிய நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா குழுமத்தின் (Telstra Group) கிளை நிறுவனமாகவும், முன்னணி டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான வர்சென்ட் குழுமத்தில் (Versent Group) 75 சதவீத பங்குகளை 153 மில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1,300 கோடி தொகைக்கு கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், இன்போசிஸ் மற்றும் டெல்ஸ்ட்ரா இணைந்து ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு AI தொழில்நுட்பத்தில் இயங்கும் கிளவுட் கம்பியூட்டிங் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் ஒரு கூட்டு திட்டத்தை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
75 சதவீத பங்குகளை கைப்பற்றும் ஒப்பந்தத்தின் மூலம் இன்போசிஸுக்கு வர்சென்ட் குழுமத்தில் (Versent Group) இயக்க கட்டுப்பாடு இருக்கும், ஆனால் தெல்ஸ்ட்ரா தொடர்ந்து வர்சென்ட் குழுமத்தில் 25 சதவீத சிறுபான்மை பங்கை தக்க வைத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸின் அறிக்கையில், இந்த பங்கு கைப்பற்றல் மற்றும் கூட்டணி திட்டம் மூலம் ஆஸ்திரேலிய வணிக சந்தையில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பு, தொழில்நுட்ப துறையில் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு ஒரு அடித்தளமாக அமையும்.
மேலும் இந்த பங்கு பரிவர்த்தனை 2026-ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சலில் பரேக் கூறுகையில் இந்த ஒப்பந்தம் மூலம், இரு நிறுவனங்களின் கிளவுட் சேவை திறன்களை இணைத்து உலகளாவிய அளவில் போட்டியிடும் திறனை பெறும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications