மும்பை: இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன.
இந்த நிலையில் முதல் 10 இடத்தில் உள்ள நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் கடந்த வாரத்தில் 98,622.89 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தான் டாப் லிஸ்டில் உள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம்
இதில் கடந்த வாரத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 52.046.87 கோடி ரூபாய் அதிகரித்து, 3,85,027.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியானதையடுத்து இந்த பங்கின் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் எதிர்பார்த்ததை விட கடந்த ஜூன் காலாண்டில் 12.4% அதிகரித்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் சந்தை மூலதனம்
இதே வேகமாக நுகரும் நுகர்வோர் விற்பனை பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 25,751.07 கோடி ரூபாயாக அதிகரித்து, 5.48.232.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 20,824.95 கோடி ரூபாய் அதிகரித்து, 12,11,682.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த வாரத்தில் அதன் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதையடுத்து அதன் பங்கு விலையானது புதிய உச்சத்தினை தொட்டது.
ஹெச்டிஎஃப்சி சந்தை மூலதனம் வீழ்ச்சி
எனினும் ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம் 13,920.21 கோடி ரூபாய் குறைந்து, 3,13,269.70 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் 7,617.34 கோடி ரூபாய் குறைந்து 8,26,031.21 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 4,205.71 கோடி ரூபாய் குறைந்து 2,29,156.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே கோடாக் மகேந்திராவின் சந்தை மூலதனம் 4,175.28 கோடி ரூபாய் குறைந்து, 2,62,864.37 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பார்தி ஏர்டெல் சந்தை மூலதனம்
இதே தனியார் தொலைத் தொடர்பு துறையினை சேர்ந்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4,009.83 கோடி ரூபாய் குறைந்து, 3,09,521.05 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 3,403.97 கோடி ரூபாய் குறைந்து, 6,03,463.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே ஐடிசி-சியின் சந்தை மதிப்பு 368.76 கோடி ரூபாய் குறைந்து, 2,38,469.29 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் தான் டாப்
எனினும் மொத்த சந்தை மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து, டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் யு எல், ஹெச் டி எஃப் சி, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், கோட்டக் மகேந்திரா, ஐடிசி மற்றும் ஐசிஐசிஐ வங்கின் சந்தை மூலதனம் உள்ளது.
கடந்த வாரத்தில் பிஎஸ்இ இண்டெக்ஸில் 30 பங்குகளின் மதிப்பு 425.81 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications