ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் காட்டிலும் ஐடி ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. டிசிஎஸ், விப்ரோ வெளியிட்டுள்ள மார்ச் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவுகளை வெளியிடாவிட்டாலும், பங்குச்சந்தையில் 2026ஆம் நிதியாண்டுக்கான அதன் அவுட்லுக் அடிப்படையில் சிறிய அளவிலான சரிவு பதிவு செய்தது. ஆனால் ஐடி ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை அளிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்காதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இன்று (ஏப்ரல் 17) தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2025 நிதியாண்டிற்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, இதில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மகிழ்விக்கும் வகையிலும், நாராயண மூர்த்தி, கிரிஸ் கோபால கிருஷணன் போன்ற இன்போசிஸ் நிறுவனர்களை மகிழ்விக்கும் விதமாக டிவிடென்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2025ஆம் நிதியாண்டுக்கான இறுதி டிவிடெண்டாக இன்போசிஸ் நிர்வாகம் ஒரு பங்கிற்கு 22 ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இறுதி டிவிடெண்டைப் பெறுவதற்கான தகுதி வாய்ந்த பங்குதாரர்களைத் தீர்மானிக்கும் 'ரெக்கார்ட் தேதி' மே 30 ஆம் தேதியாகும். டிவிடெண்ட் தொகை ஜூன் 30 ஆம் தேதி பின்னர் பங்குதாரர்களின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்காவது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபம் 12% குறைந்து 7,033 கோடி ரூபாயாக உள்ளது. இருப்பினும், அதே காலகட்டத்தில், ஆப்ரேட்டிங் வருவாய் 8% உயர்ந்து 40,925 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் அதிகரித்த போதிலும் நிகர லாபம் குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் நெருடும் விஷயமாக உள்ளது.
இந்த 22 ரூபாய் டிவிடெண்ட் இன்போசிஸ் நிர்வாகம் 2025 நிதியாண்டில் வழங்கும் இரண்டாவது டிவிடெண்ட் ஆகும். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு, பங்குதாரர்களுக்கு மொத்தம் 49 ரூபாயை டிவிடெண்டாக வழங்கப்பட்டுள்ளது. மே 2002 முதல், இன்போசிஸ் நிறுவனம் மொத்தம் 48 முறை டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, இன்போசிஸ் நான்காவது காலாண்டில் வருவாய் வளர்ச்சியைக் காட்டியிருந்தாலும், நிகர லாபத்தில் சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் தனது பங்குதாரர்களுக்குக் கணிசமான டிவிடெண்ட் தொகையைத் தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நாளை பங்குச்சந்தை விடுமுறை என்பதால் இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் மீதான பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் ரியாக்ஷன் தெரியாது. இதனால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் தான் இக்காலாண்டு முடிவுகளின் உண்மையான நிலவரம் தெரியும்.
இன்போசிஸ் பங்குகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான வர்த்தகத்தில் மட்டும் 24.16 சதவீதம் சரிந்துள்ளது. நீங்க இன்போசிஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளீர்களா..? கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications