இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் வியாழக்கிழமை மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் வங்கிகள் வீழ்ச்சி காரணமாக ஐடி நிறுவனங்கள் பாதிக்கும் என கணிக்கப்பட்டாலும் இன்போசிஸ் 8 சதவீத உயர்வுடன் 6,128 கோடி ரூபாய் லாபத்தையும், 16 சதவீத வருடாந்திர உயர்வில் 37,441 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் தனது காலாண்டு முடிவுடன் பங்குச்சந்தையில் இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது வருடாந்திர கிராண்ட்-கள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. பங்குச்சந்தையில் தரவுகள்படி சலில் பாரிக் சுமார் 51.75 கோடி ரூபாய் மதிப்பிலான Restricted Stock Units-களை பெற உள்ளார். இது நிறுவனத்தின் செயல்பாடுகளை பொருத்து அவருக்கு வழங்கப்படும்.

இன்போசிஸ் நிறுவனத்தின் 2015 Stock Incentive Compensation திட்டத்தின் பிடி 2024 ஆம் நிதியாண்டுக்கு நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள இலக்குகள் படி நிறுவனம் செயல்படும் பட்சத்தில் சிலில் பாரிக் சுமார் 34.75 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவன பங்குகளை பெறுவார். இந்த பங்குகள் 12 மாதத்திற்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது. இதோடு நிற்கவில்லை என்பது தான் முக்கியமான விஷயம்.
இன்போசிஸ் நிறுவனத்தின் ESG இலக்கை அடைவதன் வாயிலாக 2 கோடி ரூபாய் மதிப்பிலான பர்பாமென்ன்ஸ் பங்கு இன்சென்டிவ் வழங்கப்பட உள்ளது. இதேபோல் 5 கோடி ரூபாய் மதிப்பிலான Cumulative relative TSR பங்குகள், கடைசியாக 10 கோடி ரூபாய் மதிப்பிலான வருடாந்திர செயல்பாட்டு திறன் அடிப்படையில் வழங்கப்படும். மேலும் இன்போசிஸ் நிர்வாகம் இந்த செயல்பாடுகளை 2023 மே 2 ஆம் தேதி நிறுவன பங்கு அளவீட்டை அடிப்படையாக வைத்து கணக்கிடும்.

இதற்கிடையில் இன்போசிஸ் நிர்வாகம் 2023 ஆம் நிதியாண்டுக்கு 13 கோடி ரூபாய் மதிப்பிலான Restricted Stock Units அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது, இது பல பிரிவுகளில் கீழ் கணக்கிட்டு மொத்தமாக பங்கு இருப்புகளை கணக்கிட்டு அறிவித்துள்ளது. 13 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் உடன் சலில் பாரிக்-கிற்கு அடிப்படை சம்பளம் உள்ளது.


Click it and Unblock the Notifications