டிசிஎஸ்-ன் முதல் இடத்திற்குத் தொடர்ந்து போட்டிப்போட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 36,538 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 23.4 சதவீதம் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் லாப அளவில் 11 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 6021 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
இதோடு இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் மிகப்பெரிய பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஈவுத்தொகை
செப்டம்பர் காலாண்டு முடிவில் ஒரு பங்கிற்குச் சுமார் 16.50 ரூபாய் ஈவுத்தொகையை அளிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதோடு இன்போசிஸ் பங்குகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது.
பைபேக் திட்டம்
இன்போசிஸ் நிறுவனம் ஓப்பன் மார்கெட்டில் இருக்கும் அதன் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரீடைல் சந்தையில் இருக்கும் பங்குகளை ஒரு பங்கிற்கு அதிகப்படியாக 1850 ரூபாய் விலையில் சுமார் 9300 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது.
நிலஞ்சன் ராய்
இடைக்கால டிவிடெண்ட் மற்றும் பைபேக் திட்டம் குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான நிலஞ்சன் ராய் அறிவித்தார். இது புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்களைத் தக்க வைக்கவும் பெரிய அளவில் பயன்படும்.
இன்போசிஸ் பங்குகள்
இன்போசிஸ் பங்குகள் இன்று 1419.75 ரூபாய் மதிப்பில் முடிந்துள்ளது, இந்த நிலையில் 9300 கோடி ரூபாய் தொகைக்கு 1850 ரூபாய் விலையில் இன்போசிஸ் பங்குகளை வாங்கினால் குறைந்தபட்சம் 2.5 கோடி பங்குகளையும், விலை குறைவாக வாங்கினால் அதிகப்படியாக 5 கோடி பங்குகள் வரையில் வாங்க முடியும்.
4வது பைபேக் திட்டம்
இன்போசிஸ் நிறுவனம் 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்ட 4வது பைபேக் திட்டமாகும். டிசம்பர் 2017ல் 13000 கோடி ரூபாய்க்கும், 2019ல் 8260 கோடி ரூபாய், அக்டோபர் 2021ல் 9200 கோடி ரூபாய்க்கு பைபேக் திட்டத்தை அறிவித்து இருந்தது.


Click it and Unblock the Notifications