இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் ஊழியர்களுக்கு அவர்களுக்கான 2025 ஆம் நிதியா ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான செயல்திறன் அடிப்படையிலான போனஸ் தொகை எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் என தெரிவித்திருக்கிறது.
நிறுவனத்தின் லாபம் குறைந்தது மற்றும் ஐடி துறையின் மந்தமான போக்கு ஆகியவை காரணமாக செயல்திறன் போனஸ் குறைவாகவே இருக்கும் என முன்கூட்டியே இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு கூறி இருக்கிறது. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் காணொலி வாயிலாக கூட்டம் நடத்தியதாகவும் அப்போது நிறுவனத்தின் லாபம் குறைந்ததன் காரணமாக இந்த காலாண்டில் செயல் திறனுக்கான போனஸ் எதிர்பார்த்த அளவு இருக்காது எனக் கூறியிருக்கிறது.

மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 11.7 சதவீதம் குறைந்திருக்கிறது. 2026 ஆம் நிதி ஆண்டுக்கான நிறுவனத்தின் நிதி நிலவரம் மந்தமாகவே இருக்கும் என கணிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதுவே இந்த நிறுவனம் ஊழியர்களுக்கான செயல் திறன் போனஸை குறைப்பதற்கு காரணமாக இருக்கிறது. பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களை தான் சார்ந்து இருக்கின்றன.
அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்லக்கூடிய சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் ஐடி துறைக்கான தங்களுடைய செலவினங்களை குறைத்து வருகின்றன. இது இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் வருமானத்தை பெருமளவில் பாதித்திருக்கின்றன. கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளிலேயே பெரும்பாலான நிறுவனங்களின் லாபம் குறைந்து இருந்தது இதன் மூலம் தெரிய வந்தது. அமெரிக்க பொருளாதார மந்த நிலை அடுத்த சில மாதங்களுக்கும் நீடிக்கும் என்பதால் ஐடி துறையே நெருக்கடியான சூழலுக்கு சென்று இருக்கிறது.
இந்த நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தற்போது இருக்கும் சூழல் மேம்படும் போது ஊழியர்களுக்கு தகுதி வாய்ந்த சிறந்த போனசை வழங்குவதற்கு நிறுவனம் ஆலோசனை நடத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொறுப்புணர்வுடனும் கடின உழைப்போடும் செயல்பட்ட ஊழியர்களை நாங்கள் பாராட்டுகிறோம் உங்களுடைய உழைப்பு வீண் போகாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தான் இன்போசிஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைத்து கடிதம் அனுப்பியது, பெரும்பாலான ஊழியர்களுக்கு 5 முதல் 8 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருந்தது . முன்னதாக டி சி எஸ் நிறுவனம் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பை தள்ளி வைப்பதாக தெரிவித்திருக்கிறது. விப்ரோ நிறுவனம் இதுவரை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து குறித்து அறிவிப்பையே வெளியிடவில்லை.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications