இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த 6 மாதமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, இதற்கு மத்தியில் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு தான் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக அயர்லாந்து நாட்டின் அக்சென்சர் மற்றும் அமெரிக்காவின் காக்னிசென்ட் ஆகிய நிறுவனங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த பின்பு, இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எப்போது என்ன அறிவிப்பை வெளியிடும் என்று ஐடி ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் கொரோனா காலத்தில் கொடுத்த முக்கியமான work from home சலுகையை மொத்தமாக திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருக்கும்..?
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இன்போசிஸ் நிர்வாகம் அமெரிக்கா, கனடாவில் இருக்கும் தனது ஊழியர்களை வாரத்தில் 5 நாளும் அலுவலகத்திற்கு வந்து பணியை துவங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் அமெரிக்கா, கனடாவில் இருக்கும் பல ஆயிரம் இன்போசிஸ் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் நிரந்தரமாக திரும்பப்பெறப்பட்டு உள்ளது.
இன்போசிஸ் அமெரிக்கா மற்றும் கனடா வர்த்தகத்தில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நிறுவனங்கள் வொர்க் பர்ம் ஹோம் சலுகையை நிறுத்தி பல மாதங்களான நிலையில் தற்போது இன்போசிஸ் இதை செயல்முறைப்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இப்புதிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள அலுவலகங்களுக்கும், ஊழியர்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்போசிஸ் நிறுவனம் இந்தியாவில் பணிபுரியும் தனது ஊழியர்களை மூன்று கட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தி அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது.
மார்ச் காலாண்டு முடிவுகளுக்கு பின்பு இன்போசிஸ் தனது ஊழியர்களை வாரத்தில் 3 நாள் அலுவலகம் வருவதை 80 சதவீத ஊழியர்களுக்கு கட்டாயமாக்கி, நடைமுறைப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications