இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவில் மென்பொருள் சேவைகளை ஏற்றுமதி செய்து வரும் இன்போசிஸ் 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது. எப்போது டிசிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்து காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் இன்போசிஸ், இந்த முறை 4வது ஐடி சேவை நிறுவனமாக தனது நிதியியல் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டாக இருக்கும் ஜூன் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 5,945 கோடி ரூபாய் அளவிலான தொகையை மொத்த லாபமாக பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை விடவும் 11 சதவீதம் அதிகமாகும். இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 9.5 சதவீதம் அதிகரித்து 38,494 கோடி ரூபாயாக உள்ளது.

ஜூன் காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 3 சதவீதத்திற்கு மேல் குறைந்து 17.3 சதவீதமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் இன்போசிஸ் ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,36,294 ஆக உள்ளது, இது மார்ச் காலாண்டில் 3,43,234 ஆக இருந்தது. இதன் மூலம் வெறும் 3 மாத காலத்தில் 6,940 ஊழியர்கள் குறைந்துள்ளனர், இந்திய ஐடி நிறுவனங்களில் ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதை பார்த்து பழகிய மக்களுக்கு 6900 ஊழியர்கள் குறைந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த நிதியாண்டில் ஜூன் காலாண்டில் இன்போசிஸ் அட்ரிஷன் விகிதம் 28.4 சதவீதமாக இருந்தது, மார்ச் காலாண்டில் 20.9 சதவீதமாகவும் இருந்த அட்ரிஷன் விகிதம் 2024ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 17.3 சதவீதமாக குறைந்துள்ளது இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இன்போசிஸ் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் ஜூன் 30, 2023 இல் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,36,294 ஆகவும், ஜூன் 30, 2022 இல் 3,35,186 ஊழியர்களாகவும், மார்ச் 31, 2023 இல் 3,43,234 ஊழியர்களாகவும் இருந்தது. இதை தொடர்ந்து 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஜூன் காலாண்டில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,36,294 ஆக உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications