இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்த 'அந்த' ஈமெயில்.. அதிர்ச்சி அளிக்கும் முடிவை எடுத்த சலில் பாரிக்..!

உலக நாடுகளில் ரெசிஷன் அச்சமும், பாதிப்பும் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் நாட்டின் ஏற்றுமதி அளவுகள் சரிந்து நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 4 மாதங்களாகத் தொடர்ந்து 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.

உலக நாடுகளில் உருவாகியிருக்கும் ரெசிஷன் தாக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ள இந்திய ஐடி நிறுவனங்களும் பல வழிகளில் நெருக்கடிகளை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளது.

இதன் வாயிலாக இன்போசிஸ் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பால் இந்நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றால் மிகையில்லை.

 இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்தியாவில் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாகவும், அமெரிக்கா - ஐரோப்பிய சந்தையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 65 சதவீத வேரியபிள் பே மட்டுமே அளிக்கப்படும் என தனது ஊழியர்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேரியபிள் பே

வேரியபிள் பே

வேரியபிள் பே என்பதும் பெரும்பாலான ஐடி ஊழியர்களுக்குத் தங்களது மொத்த சம்பளத்தில் 10 - 15 சதவீதம் வரையிலான தொகையை வேரியபிள் பே ஆகப் பிரித்துக்கொள்ளும். இந்தத் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஊழியரின் செயல் திறன் மற்றும் நிறுவனத்தின் செயல் திறன் அடிப்படையில் அளிக்கப்படும்.

65 சதவீதம் மட்டுமே

65 சதவீதம் மட்டுமே

இப்படிச் செப்டம்பர் காலாண்டுக்கான வேரியிபிள் பே தொகையை இன்போசிஸ் ஊழியர்கள் 65 சதவீதம் மட்டுமே பெறுவார்கள், மேலும் இந்த அளவீடு ஒவ்வொரு ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் சில சதவீதம் மாறுபடும், ஆனால் பேஸ் லெவலாக 65 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 நவம்பர் மாத சம்பளம்

நவம்பர் மாத சம்பளம்

மேலும் இந்த 65 சதவீத வேரியபிள் பே தொகை நவம்பர் மாத சம்பளத்தில் அளிக்கப்பட உள்ளது, இதைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த வேரியபிள் பே நவம்பர் மாதத்தின் 2வது பேஅவுட்-ல் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது இன்போசிஸ்.

ஈமெயில்

ஈமெயில்

இன்போசிஸ் ஊழியர்களுக்கு நவம்பர் 17ஆம் தேதி வேரியபிள் பே குறித்த தகவல்-ஐ ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அனைத்து இன்போசிஸ் ஊழியர்களுக்கும் 70 சதவீதம் வேரியபிள் பே மட்டுமே அளித்த நிலையில், தற்போது 65 சதவீதம் வேரியபிள் பே அறிவித்துள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள் ரெசிஷன் காரணமாக மிகவும் மந்தமான டிமாண்ட்-ஐ எதிர்கொண்டு உள்ளது, இதோடு மார்ஜின் பிரச்சனை, அதிகப்படியான ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் சவாலான சூழ்நிலை உருவாகியுள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ்

டிசிஎஸ், இன்போசிஸ்

சமீபத்தில் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் சுமார் 70 சதவீத ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் விப்ரோ அனைத்து ஊழியர்களுக்கும் 100 சதவீத வேரியபிள் பே தொகையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+