இன்போசிஸ், இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனம். இன்போசிஸ்-ன் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு இந்நிறுவனத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சனையை தீர்க்க முடிவு செய்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுளளது.
கடந்த ஒரு வருடமாக இன்போசிஸ் மூத்த அதிகாரிகள் அடுத்தடுத்து நிறுவனத்தை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதனால் உயர்மட்ட நிர்வாகத்தில் சில தடுமாற்றம் ஏற்பட்டத்து. இதை காலாண்டு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பு சரி செய்யும் விதமாக சிஇஓ சலில் பாரிக் கீழ் பணியாற்றும் மூத்த நிர்வாக பிரிவில் இருப்போருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இன்போசிஸ் நிர்வாகம் சமீபத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மூத்த நிர்வாகிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பதவி உயர்வு நடவடிக்கைகளில் ஒன்றாகும். காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் மட்ட திறமைகளின் வெளியேற்றத்திற்கு தடுத்து இனி நிலையான நிர்வாகத்தை அமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 25 ஊழியர்கள், நிர்வாக துணை-தலைவர் மற்றும் மூத்த துணை-தலைவர் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இது நிறுவனத்தின் மதிப்புமிக்க நிர்வாகிகளை தக்க வைத்து, முக்கிய வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
டெக் மஹிந்திரா மற்றும் காக்னிசென்ட் போன்ற சக போட்டி நிறுவனங்களுக்கு இன்போசிஸ் மூத்த நிர்வாகிகள் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த பதவி உயர்வு வந்துள்ளது. சலில் பரேக் இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக இரண்டாவது முறை நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் தலைவர்கள் உட்பட பல உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
இதேவேளையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி பிற நிறுவனங்களுக்கு தலைவரான அதிகாரிகள் பெரும் கூட்டத்தை தன்னுடன் இழுத்து சென்றுள்ளது.
உதாரணமாக, காக்னிசென்ட் நிறுவனம் இன்ஃபோசிஸில் இருந்து குறைந்தது ஏழு நிர்வாகிகளை நியமித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் CTS தலைமை நிர்வாக அதிகாரியான ரவி குமார் தான், இவர் முன்னாள் இன்போசிஸ் மூத்த அதிகாரி ஆவார்.
இதேபோல் டெக் மகிந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வும் இன்ஃபோசிஸ்-ன் முன்னாள் உயர் அதிகாரியான மோஹித் ஜோஷி தான், இவர் 12க்கும் அதிகமான இன்ஃபோசிஸ் நிர்வாகிகள் இங்கு சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இன்போசிஸ் இனியும் அமைதியாக இருந்தால் மொத்த கூட்டமும் வெளியேறிவிடும் என்ற அச்சத்தில் 25க்கும் அதிகமான ஊழியர்களை நிர்வாக துணை-தலைவர் மற்றும் மூத்த துணை-தலைவர் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications