இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் கடந்த 2 மாதத்தில் டிரான்ஸ்அமெரிக்கா போன்ற பெரிய வாடிக்கையாளரை இழந்தாலும், இதை ஈடு செய்யும் வகையில் 1 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய பல 2 திட்டங்களை பெற்று முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த நிலையில் டிசிஎஸ்-க்கு போட்டியாக இன்போசிஸ் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான ஆக்சென்சர் இந்த வருடத்திற்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை தொடர்ந்து மதிப்பீட்டு செய்துள்ளது இந்திய ஐடி நிறுவன முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இத்தகைய சூழ்நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ் அடுத்தடுத்து புதிய ஆர்டர்களை பெறுவது மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது.

டென்மார்க் நாட்டின் Danske Bank-ன் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் பணிகளுக்கான 454 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இன்போசிஸ் கைப்பற்றியுள்ளது என இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் Danske Bank-ன் 3700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இன்போசிஸ் பெற்றுள்ளது பெரும் சாதனை. இன்போசிஸ் - Danske Bank மத்தியில் நடந்த இந்த ஒப்பந்தம் 5 வருடத்திற்கானது, ஆனால் இத்திட்டம் கூட்டணி 3 வருடங்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்படுமாயின் 900 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை இந்த ஒப்பந்தம் மூலம் இன்போசிஸ் பெறும் என பங்குச்சந்தைக்கு சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் Danske Bank-க்கு டிஜிட்டல், கிளவுட், டேட்டா சேவைகள் வழங்குவது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக AI சேவைகளையும் வழங்குகிறது என இந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
பெங்களூரில் Danske Bank தனது ஐடி சேவை அலுவலகத்தை கைப்பற்றும் மாபெரும் போட்டியில் ஆக்சென்சர் நிறுவனத்தை ஓடம்கட்டி இன்போசிஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் Danske Bank IT-யின் பெங்களூர் அலுவலகம் மற்றும் அதன் 1400 ஊழியர்களும் இன்போசிஸ் நிர்வாகத்தின் கீழ் வர உள்ளனர்.
இன்போசிஸ் மே மாதம் பிரிட்டன் நாட்டின் BP நிறுவனத்தின் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை பெற்றது, 2020க்கு பின்பு டயாம்லர் நிறுவன ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிக மதிப்பீட்டு திட்டத்தை கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications