இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஐடி துறைக்கு டிரம்ப் துவங்கி வைத்த வர்த்தக போர் மூலம் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதற்கான சிக்னலை மார்ச் காலாண்டு முடிவுகளில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை கொடுத்துள்ளது. இதில் டிசிஎஸ், விப்ரோ ஆகியவை சம்பள உயர்வு குறித்து இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது என அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் 2024ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வை ஜூலை 2024ல் கொடுக்க வேண்டியதை, இப்போது தான் அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால் 2025ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்-க்கு மட்டும் 50 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்துள்ளது.

இந்திய ஐடி சேவைத் துறையில் டிசிஎஸ்-க்கு அடுத்தபடியாக இருக்கும் இன்போசிஸ், 2025 நிதியாண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சலில் பாரிக்கிற்கு ஊழியர் பங்கு விருப்பத் திட்டத்தின் (Employee Stock Option Plans - ESOPs) திட்டத்தின் கீழ் சுமார் 50 கோடி மதிப்புள்ள பங்குகளை வழங்கியுள்ளது.
இன்போசிஸ் நிறுவன சிஇஓ சலில் பாரிக்-கிற்கு 2025ஆம் நிதியாண்டுக்கான சம்பளம் குறித்த முழுமையான தகவல் வெளியாகாத நிலையில் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இன்போசிஸ் நிர்வாகம் 50 கோடி ரூபாய் அளவிலான பங்குகளைக் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பங்கு ஒதுக்கீடு, நிறுவனத்தின் பல்வேறு செயல்திறன் அடிப்படையில் அவருக்கு Restricted Stock Units (RSUs) வடிவில் இந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வழங்கப்பட்டுள்ளன. இந்த ESOPகளுக்கான உரிமை பெறும் காலம், பங்குகள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 12 முதல் 24 மாதங்கள் வரை இருக்கும்.
இதோடு இன்போசிஸ் ஊழியர்களுக்கும் சிலருக்கு 5,000 Restricted Stock Units (RSUs)களையும் வழங்கியுள்ளது. இந்த RSUs நான்கு ஆண்டுகளில் சமமான தவணைகளில் உரிமை பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டு வழங்கியுள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.
இந்திய ஐடி சேவை துறையில் உள்ள சிஇஓ-க்களின் சம்பளத்தைப் பார்க்கும் 2024 நிதியாண்டில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ பட்டியலில் சலில் பரேக் இரண்டாவது இடத்தில் இருந்தார். இப்போதைய காலக்கட்டத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 66.25 கோடி ரூபாய். ஆனால் முதல் இடத்தில் இருந்த விப்ரோவின் முன்னாள் CEO தியரி டெலாபோர்ட் 20 மில்லியன் டாலர் அன்றைய மதிப்பில் இது சுமார் 166 கோடி ரூபாயாகும்.
சலில் பரேக்கின் 2022 நிதியாண்டில் அதிகப்படியாக 71 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார், 2023 நிதியாண்டில் இது 56 கோடியாக குறைந்தது. 2025ஆம் நிதியாண்டில் ESOP வாயிலாக மட்டுமே சிலில் பாரிக் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருக்கும் வேளையில் மொத்த சம்பளம் 2022ஆம் நிதியாண்டில் வாங்கிய 71 கோடி ரூபாயை தாண்டுமா..?
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications