உலகமே ரெசிஷன் அச்சம் காரணமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து புதிய வர்த்தகத்தைப் பெற தடுமாறி வரும் வேளையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று வருவது மட்டும் அல்லாமல் பணிநீக்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இயங்கி வருகிறது.
உண்மையில் ரெசிஷன் அச்சம் இந்திய ஐடி சேவை துறையில் இல்லையா என்ற கேள்வி பல லட்சம் இந்திய ஐடி ஊழியர்களுக்கு எழுந்தாலும், புதிய ப்ராஜெக்ட்களைப் பெற்று வரும் காரணத்தால் தொடர்ந்து நம்பிக்கை உடன் உள்ளனர்.
இந்த நிலையில் தான் விப்ரோ நிறுவனத்தில் பிரஷ்ஷர்களின் சம்பளத்தைக் குறைத்தது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்-ன் தினசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா.. ?
இன்போசிஸ்
இந்தியாவின் 4 முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் ஐடி சேவை ஏற்றுமதியிலும், வருவாயிலும் 2வது இடத்தில் உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அதன் நிறுவனர்கள் வெளியேறிய பின்பு விஷால் சிக்கா சிஇஓ-வாகப் பதவியேற்றி சில வருடங்களிலேயே வெளியேறிய காரணத்தால் இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகம் சில காலம் தடுமாறியது.
சலில் பாரிக்
இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் பெரும் நம்பிக்கை உடன் சலில் பாரிக் சிஇஓ-வாக நியமித்தது. இவரது தலைமையில் இன்போசிஸ் வேகமாக வளர்ச்சி அடைந்து மட்டும் அல்லாமல் வர்த்தகம், வருவாய் என அனைத்த பிரிவுகளிலும் இன்போசிஸ் நிறுவனர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நம்பிக்கை அளித்தார். இது மட்டுமா பல ஆண்டில் நிர்வாகத்தின் இலக்கை விடவும் அதிகப் பர்பாமென்ஸ்-ஐ காட்டி மிரளவைத்தார். இதற்கு ஏற்ப இவருடைய சம்பளமும் அதிகரித்தது.
30 வருட அனுபவம்
இன்போசிஸ் சிஇஓ-வான சலில் பாரிக்-கிற்கு ஐடி துறையில் சுமார் 30 வருட அனுபவம் உள்ளது. மேலும் இவருக்கு இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தையிலும் வர்த்தக அனுபவம் அதிகமாக இருக்கும் காரணத்தால் இன்போசிஸ் இவரது நிர்வாகத்தின் கீழ் வேகமாக வளர்ச்சி அடைந்தது.
9.75 கோடி ரூபாய் சம்பளம்
இதன் வாயிலாகச் சலில் பாரிக்-ன் சம்பளம் 2022ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 88 சதவீதம் அதிகரித்துள்ளது. இவருடைய வருடாந்திர சம்பளம் 42.50 கோடி ரூபாய், ஆனால் இந்த உயர்வுக்குப் பின்பு 2022ல் சுமார் 79.75 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றார். இதில் இன்போசிஸ் நிர்வாகம் அளிக்கும் பங்குகளின் மதிப்பும் அடக்கம்.
தினமும் 21 லட்சம் ரூபாய் சம்பளம்
சலில் பாரிக்-ன் 79.75 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடி ரூபாய் Fixed Salary, மீதமுள்ள 68 கோடி ரூபாயும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை. அப்படிப் பார்த்தால் 2022ல் இன்போசிஸ் சிஇஓ ஒரு நாளுக்குச் சுமார் 21 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
இந்திய ஐடி சேவை துறை
இந்திய ஐடி சேவை துறையில் சக போட்டி நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளத்தை ஒப்பிடுகையில் சலில் பாரிக்-ன் சம்பளம் மிகவும் அதிகம். இது மட்டும் அல்லாமல் அதிகச் சம்பளம் வாங்கும் சிஇஓ பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார் சலில் பாரிக்.


Click it and Unblock the Notifications