ஐடி ஊழியர்களே கவனம்..!! 50% ஏஐ தான் என கூறும் இன்போசிஸ் CEO சலீல் பரேக்..!!

ஐடி துறைகளில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஐடி ஊழியர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இதுவாகும்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ள சலில் பரேக், இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணிகளில் பாதியளவு அதாவது கிட்டத்தட்ட 50 சதவீதம் ஏஐ சேவைகள் மூலமாக மட்டுமே நடக்கும் என கூறியுள்ளார்.

ஐடி ஊழியர்களே கவனம்..!! 50% ஏஐ தான் என கூறும் இன்போசிஸ் CEO சலீல் பரேக்..!!

இன்போசிஸின் வருவாயில் ஏஐ சேவைகள் கடந்த காலாண்டில் 8 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் இரட்டை இலக்க அளவில் உயர்ந்து வருவதாக சலில் பரேக் குறிப்பிட்டுள்ளார். இந்தவேகம் தொடர்ந்தால், இன்னும் சில காலாண்டுகளுக்குள்ளேயே இன்போசிஸ் செய்யும் மொத்த பணிகளில் கணிசமான பகுதி ஏஐ மயமாகிவிடும் என்றும், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் அது ஏறக்குறைய 50%ஆக உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏஐ ஏஜெண்டுகளை உருவாக்குவது, நவீன கோடிங் மற்றும் மென்பொருள் உருவாக்குதல் பணிகள், வாடிக்கையாளர்களின் பழைய தொழில்நுட்ப அமைப்புகளை நவீனமயமாக்குவது போன்ற பல்வேறு முக்கிய பணிகளில் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3 லட்சம் ஊழியர்களில் சுமார் 80,000 ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கான கோடிங் கருவிகள் மற்றும் பல திட்டங்களில் ஏஐ உடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்கிறார்.

Also Read

வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களை சமாளிக்கவும் இன்போசிஸ் நிறுவனம் புதிதாக பணியமர்த்தப்படும் பட்டதாரிகளுக்கு பிரத்யேகமாக ஏஐ பயிற்சியை அளித்து வருகிறது. இவர்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய பெரு நிறுவனங்கள் தற்போது ஏஐ சேவைகளை தீவிரமாக பயன்படுத்தி வருவதாகவும், குறிப்பாக செலவை குறைக்க குறைந்த விலை டோக்கன்கள் மற்றும் ஓப்பன்-வெயிட் மாடல்களை பயன்படுத்த முற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

உலகளாவிய ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மிக விரைவில் பெருமளவு உயரப்போவதையும், இன்போசிஸ் நிறுவனம் அதற்கு தங்களை முழுமையாக தயார்ப்படுத்தி வருவதையும் தான் சலீல் பரேக் குறிப்பிடுகிறார்.

ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் கூட ஏஐ மற்றும் டிஜிட்டல் திறன் கொண்டவர்களே தங்கள் நிறுவனத்தில் இனி 80% வேலைவாய்ப்புகளை பெறுவார்கள் என அறிவித்தது. எனவே ஐடி வேலையில் இருப்பவர்கள், ஐடி வேலைக்கு படிப்பவர்கள் ஏஐ, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தினால் மட்டுமே வேலை கிடைக்கும் அந்த வேலையை தக்க வைத்து கொள்ளவும் முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+