இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சலில் பாரிக் 2வது பதவி காலம் முடியும் வேளையில் அவருக்கு மீண்டும் பதவிகாலம் நீட்டிப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2027ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சலில் பாரிக்-ன் இரண்டாவது பதவிக்காலத்திற்கு பின்பு இன்போசிஸ் நிறுவனத்தை இயக்கபோவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் காலகட்டம் என்பதால், இத்துறையை வேகமாக மாற்றி அமைக்கும் நேரத்தில் இன்போசிஸ்-க்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பல முக்கிய அதிகாரிகள் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சலில் பாரிக் வெளியேறினால் பெரும் தாக்கம் நிறுவனத்தில் உருவாகும். இதற்கான தீர்வு என்னவாக இருக்கும்..?

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இன்போசிஸ்-க்கு 2027 முக்கியமான ஆண்டு
2027ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக இருக்கும். சிஇஓ சலில் பாரிக்கின் இரண்டாவது பதவிக்காலம் மார்ச் 31, 2027 அன்று முடிவடைய உள்ளது. அதே சமயத்தில், நிர்வாகம் அல்லாத தலைவர் நந்தன் நீலேகணி இன்போசிஸ் நிறுவனத்திற்கு திரும்பி வந்து 10 வருடத்தை நிறைவு செய்வார். அவர் 2017ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக பொறுப்பை ஏற்றார்.

முக்கிய கேள்வி
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக மாற்றும் புதிய யுகத்தில் நிறுவனத்தை யார் வழிநடத்துவது? இந்தக் கேள்விக்கான பதில், பல்வேறு தரப்புகளில் இருந்த வந்த தகவல் படி சலில் பாரிக் இப்பதவியில் தொடர்ந்து நிறுவனத்தை ஏஐ பாதையில் வழிநடத்தலாம்.

ஆனால் இது முழுமையான புதிய மற்றும் முழுமையான பதவிக்காலமாக இருக்காது. அதாவது சலில் பாரிக் 1-2 ஆண்டுகள் மட்டுமே சிஇஓ பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளது. முழுமையான மூன்றாவது பதவிக்காலம் அவருக்கு வழங்கப்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது என கருத்து நிலவுகிறது என பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

AI மற்றும் சவாலான சூழல்
கடந்த மாதம் இன்போசிஸ் தனது AI உத்தியை வெளியிட்டது. இது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடிப்படையாக கருதப்படுகிறது. மேலும் போர் காரணமாகவும், ஏஐ தொழில்நுட்பத்தின் அதிரடி வளர்ச்சி காரணமாகவும் பொருளாதார சூழல் இப்போது மிகவும் மந்தமாக உள்ளது.

இத்தகைய சூழலில் இன்போசிஸ் நிறுவனத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாரிக் இன்போசிஸ் சேர்மன் ஆக பதவி உயர்வு பெற்று புதிய சிஇஓ-வை தேர்வு செய்து இப்பதவியில் நியமிக்கலாம் எனவும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 ஆப்ஷன்
இன்போசிஸ் நிர்வாக குழுவிடம் தற்போது இரண்டு முக்கிய விருப்பங்களைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று, பாரேக்குக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே கொண்ட சிறிய மூன்றாவது பதவிக்காலத்தை வழங்குவது.

இரண்டாவது விருப்பம், பாரேக்கை சேர்மன் பதவிக்கு உயர்த்தி, புதிய CEO-வை நியமிப்பது. இந்த முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடைபெறும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு ஆப்ஷனும் பாதிகாப்பான முடிவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+