இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் அதிகம் இருக்கும் துறை என்றால் அது ஐடி துறை தான்.
கடந்த ஆண்டுக் கொரோனா தொற்றுக் காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் அதிகப்படியான சம்பளத்தைப் பெற்ற நிலையில் 2022ஆம் நிதியாண்டிலும் ஜாக்பாட் அடித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சலில் பாரிக்-ன் கடந்த ஆண்டுக்கான சம்பள தரவுகள் வெளியாகியுள்ளது.
இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்
இந்தியாவின் 2வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் நிறுவன சிஇஓ சலில் பாரிக்-ன் 2021-22ஆம் ஆண்டுக்கான சம்பளம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவரது ஆண்டுச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
71 கோடி ரூபாய் சம்பளம்
2021-22ஆம் ஆண்டுக்கான சம்பளம் 43 சதவீதம் அதிகரித்து மூலம் மொத்தம் 71 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளமாகப் பெறுகிறார். இந்தத் திடீர் உயர்வு கடந்த ஆண்டுச் சலில் பாரிக்-கிற்கு அளிக்கப்பட்ட பங்குகள் மூலம் கிடைத்த கூடுதல் வருமானமும், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் வேரியபிள் பே-வில் ஏற்பட்ட உயர்வும் தான் முக்கியக் காரணம்.
பங்குகள்
சலில் பாரிக் 2020-21ஆம் நிதியாண்டில் 49.7 கோடி ரூபாய் மட்டுமே பெற்ற நிலையில் தற்போது 71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சலில் பாரிக்-ன் சம்பளத்தில் 2015ஆம் ஆண்டு இன்போசிஸ் கொடுத்த 2,29,792 பங்குகளையும், 2019ஆம் ஆண்டின் 1,48,434 பங்குகளையும் விற்றுப் பணமாகப் பெற்றது மூலம் அவரது சம்பளத்தின் அளவு 52.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வேரியபிள் பே
இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டுக்குச் சலில் பாரிக் 12.62 கோடி ரூபாய் வேரியபிள் பே மற்றும் 38 லட்சம் ரூபாயை retiral benefits ஆகப் பெற்றுள்ளார். இதன் மூலம் இவருடைய மொத்த சம்பளம் 71 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
யூபி பிரவின் ராவ்
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு டிசம்பர் 2021ஆம் ஆண்டு வெளியேறிய தலைமை செயல்பாட்டு அதிகாரியான யூபி பிரவின் ராவ்-ன் சம்பளம் 17.3 கோடி ரூபாயில் இருந்து 37.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பிரவின் ராவ் தனது இன்போசிஸ் பங்குகளை விற்பனை செய்தது மூலம் 26.2 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.
நந்தன் நீலக்கனி
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் நந்தன் நீலக்கனி-யின் 2021-22ஆம் நிதியாண்டுக்கு எவ்விதமான சம்பளமும் பெறவில்லை. வருடம் 71 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சலில் பாரிக் ஐஐடி பாம்பே மாணவர், சமீபத்தில் இன்போசிஸ் நிர்வாகம் இவருக்கு 5 ஆண்டுக் காலப் பணி நீட்டிப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் ஊழியர்கள்
2021-22ஆம் நிதியாண்டுக்கான அப்ரைசல் ரேட்டிங்-ஐ வாங்கிக் கையில் வைத்திருக்கும் லட்சகணக்கான இன்போசிஸ் ஊழியர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படவில்லை. சலில் பாரிக்-ன் 43% சம்பள உயர்வு இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications