இந்தியாவின் இரண்டாவது பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமாகவும், ஒவ்வொரு வருடமும் 40000 முதல் 50000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மாபெரும் ஐடி சேவை நிறுவனமாகவும் விளங்கும் இன்போசிஸ் பங்குச்சந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையில் மிகவும் முக்கியமான தகவல் இன்போசிஸ் சிஇஓ-வின் வருடாந்திர சம்பளம், 2022-23 நிதியாண்டில் இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சலில் பாரிக்-ன் சம்பள குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் வாங்கும் சிஇஓ யார் என்ற போட்டி எப்போதும் இருக்கும், கடந்த சில வருடங்களாக இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் சம்பளம் அவருடைய இலக்குகளை தாண்டி வளர்ச்சியை அடைவதால் அவருடைய வருமானமும் அதிகரித்து வருகிறது. இவரைுடைய சம்பளத்தை ஒப்பிடுகையில் டிசிஎஸ் சிஇஓ சம்பளம் மிகவும் குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2022-23 நிதியாண்டில் அவருடைய வருடாந்திர ஊதியம் 21 சதவீதம் குறைந்து 56.4 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த சில வருடங்களாக 70 முதல் 75 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்கி வந்த சிலில் பாரிக்-ன் சம்பளம் இன்போசிஸ் பங்கு மதிப்பு வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிக்கிறது.
கடந்த ஆண்டை விட குறைவான பங்கு விருப்பங்களை குறைவாக பயன்படுத்தியதால் சம்பளத்தில் சரிவு எற்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் 2015 பங்கு விருப்பத் திட்டத்தின் கீழ் 1,24,783 பங்குகளையும், 2019 திட்டத்தின் கீழ் 73,962 பங்குகளை பணமாக்கியுள்ளார்.
இதன் மூலம் 30.6 கோடி ரூபாய் பங்கு விருப்பங்கள் வாயிலாகவும், 18.73 கோடி ரூபாய் வேரியபிள் பே தொகையும், ஓய்வூதிய பலன்களாக ரூ.45 லட்சமும் பெற்றுள்ளார் சலில் பாரிக். 2022 ஆம் நிதியாண்டில் சலில் பாரிக் 71 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றார். இதில் பங்கு விருப்பங்கள் வாயிலாக 52.33 கோடி ரூபாயை பெற்றார்.
இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ கடந்த வாரம் அமெரிக்க பங்குச்சந்தை ஆணையமான SEC-க்கு சமர்ப்பித்த அறிக்கையில், தியரி டெலாபோர்ட்டே கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 5 சதவீத குறைவான சம்பளத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட்டே-வுக்கு 10 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 83 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார், இதேபோல் விப்ரோ சேர்மன் ரிஷாத் பிரேம்ஜி தனது சம்பளத்தை 50 சதவீதம் குறைத்து 951,353 டாலரை மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார்.
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் தலைவரும், non-independent director ஆக இருக்கும் நந்தன் நிலேகனி 2023 ஆம் நிதியாண்டுக்கு எவ்விதமான சம்பளத்தையும் பெறவில்லை. தலைமை நிதி அதிகாரியான நிலஞ்சன் ராய் சம்பளம் 28% உயர்ந்து 10.61 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் BFSI பிரிவின் தலைவர் மற்றும் president பதவியில் இருந்து விலகிய மோஹித் ஜோஷிக்கு 57.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. மோஹித் ஜோஷி தற்போது டெக் மஹிந்திராவின் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications