சில நாட்களுக்கு முன்பு நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அவர்களின் சம்பளத்தைப் பார்த்து வியந்த பலருக்கும் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்-ன் சம்பளம் அதிகரித்து அளிக்கலாம்.
இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தகப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இந்நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் வாயிலாக இந்நிறுவனங்களின் சம்பளமும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாதன்
டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் 2020-21ஆம் நிதியாண்டின் முடிவில், அடிப்படை சம்பளமாக 1.27 கோடி ரூபாயும், பெனிபிட்ஸ் ஆகியவற்றின் கீழ் 2 கோடி ரூபாயும், நிறுவன லாபத்தில் கமிஷன் தொகையாக 17 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.
இதன் வாயிலாக டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதனின் மொத்த சம்பளம் கடந்த ஆண்டை விடவும் சுமார் 54 சதவீத உயர்வில் 20 கோடி ரூபாயைத் தொட்டு உள்ளது.
இன்போசிஸ் சலில் பாரிக்
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் இடத்திற்குப் போட்டிப்போட்டு வரும் இன்போசிஸ்-ன் சிஇஓ சலில் பாரிக் கடந்த ஆண்டை விடவும் சுமார் 45 சதவீதம் சம்பள உயர்வுடன் 2020-21ஆம் நிதியாண்டுக்கு சுமார் 49.68 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
கடந்த நிதியாண்டில் சலில் பாரிக் 34.27 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்ற நிலையில் தற்போது 50 கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டியுள்ளது.
பங்குகள் அதிகம்
இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்-ன் 49.68 கோடி ரூபாய் மொத்த சம்பளத்தில் 30.99 கோடி ரூபாயை நிறுவனப் பங்குகளாகப் பெறுகிறார். 2015 சம்பள திட்டத்தின் கீழ் 2.92 லட்சம் பங்குகளையும், 2019 சம்பள திட்டத்தின் கீழ் 1 லட்சம் பங்குகளைப் பெற்றுள்ளார்.
சிஓஓ பிரவின் ராவ்
இதே காலகட்டத்தில் இன்போசிஸ் செயல் அதிகாரியான பிரவின் ராவ் 63 சதவீத சம்பள உயர்வில் 17.33 கோடி ரூபாயும், தலைவர் மோஹித் ஜோஷி 34.82 கோடி ரூபாயும், ரவிக்குமார் 25.25 கோடி ரூபாயும் பெற்றுள்ளனர்.
மேலும் இன்போசிஸ் சேர்மேன் 2020-21ஆம் நிதியாண்டுக்கு எவ்விதமான சம்பளத்தைப் பெற விரும்பவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications