இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பாரிக் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், செயற்கை நுண்ணறிசார் (AI) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட 200க்கும் மேற்பட்ட திட்டங்களில் தற்போது இன்ஃபோசிஸ் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்துவதால் வேலைவாய்ப்பு குறைப்பு எதுவும் இருக்காது என்றும், பெரிய நிறுவனங்களில் அனைத்து தொழில்நுட்பங்களும் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களில் எட்டில், ஆறு பேரை வெவ்வேறு நிலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து வருவதாக சலில் பாரிக் தெரிவித்தார். இதன் மூலம், டெக் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை முறையாகக் கையாண்டு, சந்தையில் உருவாகும் புதிய வாய்ப்புகளை இன்ஃபோசிஸ் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.
மேலும் உலகளவில் பொருளாதார சூழல் மேம்படுவதால், மிகப் பெரிய நிறுவனங்களில் ஜென்ஏஐ தொழில்நுட்பம் மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் என்று சலில் பாரிக் தெரிவித்தார். ஜென்ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் செலவு குறைப்பு மற்றும் வாடிக்கையாளர் இணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.
மேலும், இன்ஃபோசிஸ் கோபால்ட் (Infosys Cobalt) தளத்தைப் பல பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி வருகிறது, 35,000 கிளவுட் சொத்துக்களையும் 300க்கும் மேற்பட்ட தொழிற்துறை கிளவுட் தீர்வுகளுக்கான ப்ளூபிரின்ட் உள்ளது என தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இதன் அடிப்படையில் டிசிஎஸ் முக்கியமான முயற்சியைக் கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளது.
ஏஐ துறையில் அதிகப்படியான வர்த்தகம் பெற வேண்டுமெனில் முதன்மையாகத் தனது ஊழியர்களை இப்பிரிவில் திறமையானவர்களாக மாற்ற வேண்டும். இதை முன்கூட்டியே உணர்ந்த டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்களில் ஒரு பெரும்பகுதியினருக்கு Generative AI திறன்களில் பயிற்சி அளித்து வெற்றி பெற்றுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் 6.1 லட்சம் ஐடி ஊழியர்கள் இருக்கும் வேளையில், இதில் 3.5 லட்சம் பணியாளர்களுக்கு Generative AI தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது முன்னதாக அறிவிக்கப்பட்ட 1.5 லட்சம் பணியாளர்களை விட கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications