இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவன முதலீட்டாளர்கள் இந்த வருடம் பெரும் இழப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் சலில் பாரிக் தலைமையிலான அணியில் புதிய அதிகாரி ஒருவர் சேர்ந்துள்ளார். இந்த புதிய அதிகாரியின் சேர்ப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்திய பங்குச்சந்தை பொருத்த வரையில் ஐடி பங்குகள் எப்போதும் அதிகப்படியான லாபத்தை கொடுக்க கூடிய மற்றும் நிச்சயம் லாபம் தர கூடிய முக்கிய முதலீட்டு பிரிவாக உள்ளது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய ஐடி பங்குகள் அதிகப்படியான இழப்பை முதலீட்டாளர்களுக்கு ஆரம்பத்தில் கொடுத்து வந்தாலும், தற்போது இன்போசிஸ் மட்டுமே நஷ்டத்தை கொடுத்து வருகிறது.

இன்போசிஸ் பங்குகள் 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 11.75 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பணத்தை வங்கி பிக்சட் டெபாசிட் போட்டிருந்தால் கூட அதிக லாபம் கிடைத்திருக்கும் என கூறுகின்றனர். இன்போசிஸ் மட்டுமா நிலை என்றால்..? ஆம்
2023 ஆம் ஆண்டில் இன்போசிஸ் 11.77 சதவீத சரிவு எனில், டிசிஎஸ் 1.45 சதவீத உயர்வு, விப்ரோ 0.74 சதவீத உயர்வு, ஹெச்சிஎல் 14.41 சதவீத உயர்வு, டெக் மஹிந்திரா 13.74 சதவீத உயர்வு, LTIMindtree பங்குகள் 21.34 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் HR பிரிவின் தலைவரான ரிச்சர்ட் லோபோ இப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, இன்போசிஸ் சிஇஓ தலைமையில் நடக்கும் முக்கியமான special projects team-ல் சேர்க்கப்பட்டு உள்ளார். ரிச்சர்ட் லோபோ Xavier's கல்லூரியில் MBA பட்டமும், மனிபால் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ரிச்சர்ட் லோபோ இப்பதவியில் இருந்து வெளியேறிய நிலையில் இப்பதவியில் சுஷாந்த் தரப்பன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் 2000 முதல் பணியாற்றி வருகிறார், St Aloysius கல்லூரியில் BSc மற்றும் மங்களூர் பல்கலைகழகத்தில் MBA பட்டத்தை பெற்ற சுஷாந்த் தரப்பன் இன்போசிஸ் நிறுவனத்தில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications