இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் மூத்த அதிகாரிகள் அடுத்தடுத்து தங்களது பணியை ராஜினாமா செய்து விட்டு, போட்டி நிறுவனத்தின் உயர் பதவியில் சேர்ந்து வரும் வழக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தின் BFSI பிரிவின் தலைவராக இருந்த மோஹித் ஜோஷி ராஜினாமா செய்துவிட்டு டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வாக சேர்ந்துள்ளார், இவரை தொடர்ந்து 5க்கும் அதிமான இன்போசிஸ் உயர் அதிகாரிகள் 2023ல் மட்டுமே வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு முதல் இன்போசிஸ் நிறுவனத்தின் CFO பதவியில் வகித்து வரும் நிலஞ்சன் ராய், தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்போசிஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளதாக திங்கட்கிழமை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
நிலாஞ்சன் ராய் மார்ச் 31, 2024 வரை தனது தலைமை நிதியியல் பதவியில் இருப்பார் எனவும், இப்பதவியில் நியமிக்கப்படும் புதிய அதிகாரிக்கும் அனைத்து பொறுப்புகளையும் முறையாக ஒப்படைப்பை உறுதி செய்வதாகவும் நிலாஞ்சன் ராய் உறுதியளித்துள்ளார்
இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் முக்கிய நிர்வாகப் பணியாளரான நிலாஞ்சன் ராய் நிறுவனத்தின் சேவைகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். நிறுவனத்துடனான அவரது கடைசி பணி நாள் மார்ச் 31, 2024 ஆகும் என தெரிவித்துள்ளார்.
இதே அறிவிப்பில் இன்போசிஸ், ஏப்ரல் 1, 2024 முதல் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) ஜெயேஷ் சங்க்ராஜ்கா நியமித்துள்ளது.

ஜெயேஷ் பல்வேறு வகையான நிதித்துறை பொறுப்புகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். இன்போசிஸ் நிறுவனத்தில் 2000 முதல் 2007 வரையிலும், டிசம்பர் 2012 முதல் இப்போது வரையில் இருவேறு காலக்கட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
அக்டோபர் 2015 இல், அவர் இன்ஃபோசிஸ் குழுமத்தின் துணை CFO பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்த பதவியில் தற்போது முதலீட்டாளர் உறவுகள், வணிக நிதி, பெருநிறுவன நிதி, கருவூலம் மற்றும் வரிவிதிப்பு போன்ற செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications