இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் எஸ்டி ஷிபுலாலின் மகன் ஷ்ரேயாஸ் ஷிபுலால் மற்றும் மருமகள் பைரவி மதுசூதன் ஷிபுலால் ஆகியோர் இன்போசிஸ் நிறுவனத்தில் வைத்திருந்த தங்களின் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
செப்டம்பர் காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிறுவனம் லாபத்தில் சுமார் 3 சதவீத வருடாந்திர உயர்வுடன் 6212 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது, மேலும் வருவாய் 7 சதவீதம் உயர்ந்து 38,994 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதோடு வர்த்தக பாதிப்பு காரணமாக கேம்பஸ் இண்டர்வியூவ் செல்வது நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஐடி சேவை துறை வர்த்தகம் மந்தமான வளர்ச்சி பாதையில் இருக்கும் வேளையில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் எஸ்டி ஷிபுலால் வாரிசுகள் இன்போசிஸ் பங்குகளை 19 அக்டோபர் 2023 அன்று திறந்த சந்தையில் விற்றுள்ளனர். வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஷ்ரேயாஸ் ஷிபுலால் மற்றும் பைரவி மதுசூதன் ஷிபுலால் ஆகியோர் சுமார் 435 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை விற்றுவிட்டதாக இன்போசிஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்டி ஷிபுலால் அவர்களின் மகன் ஷ்ரேயாஸ் ஷிபுலால் 23,70,435 இன்ஃபோசிஸ் பங்குகளை ஒரு பங்கிற்கு 1,433.5168 ரூபாயில் விலையில் 339.80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த பங்குகளை விற்பனை செய்வதற்கு முன், ஷ்ரேயாஸ் ஷிபுலால் 2,37,04,350 பங்குகளை வைத்திருந்தார், இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.64 சதவீதமாகும்.
இந்த விற்பனைக்கு பின்பு ஷ்ரேயாஸ் ஷிபுலால் இப்போது 2,13,33,915 இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கிறார். இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.58 சதவீதமாகும்.
இதேபோல் எஸ்டி ஷிபுலாலின் மருமகள் பைரவி மதுசூதன் ஷிபுலால் 6,67,924 இன்போசிஸ் பங்குகளை ஒரு பங்கை 1,432.9691 ரூபாய் விலையில் 95.71 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்றார். இந்த விற்பனைக்கு முன்பு பைரவி மதுசூதன் 66,79,240 பங்குகளை வைத்திருந்தார், இது இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 0.18 சதவீதமாகும்.
95.71 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை விற்பனை செய்யப்பட்ட பிறகு, பைரவி மதுசூதன் இப்போது 60,11,316 பங்குகள் வைத்திருக்கிறார். எனவே, எஸ்டி ஷிபுலால் மகனும் மருமகளும் சேர்ந்து சுமார் 435 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை விற்றனர். இதில் ஷ்ரேயாஸ் ஷிபுலால் 339.8 கோடி ரூபாய் மதிப்பலான பங்குகளையும், பைரவி மதுசூதன் 95.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் என மொத்தம் 435.51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications