ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர் "கிரிஷ்" என அழைக்கப்படும் சேனாபதி கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் இந்திய அறிவியல் கல்லூரியின் (ஐஐஎஸ்சி) இயக்குனர் பாலராம் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கிரிஷ் தற்போது இன்போசிஸ் தினசரி நிர்வாக பணியில் இல்லை என்றாலும் இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
71 வது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெங்களூரின் சதாஷிவ நகர காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான அட்டூழிய தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) கல்லூரியில் பணியாற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த அதாவது போவி சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் துர்கப்பா என்பவரால் இந்த புகார் அளிக்கப்பட்டது. துர்கப்பா தான் "ஹனி டிராப்" வழக்கில் தவறாகச் சிக்கவைக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த சோதனையின் போது தனக்குச் சாதி அடிப்படையிலான துஷ்பிரயோகம் மற்றும் மிரட்டல்கள் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வஸ்வரையா, ஹரி கே வி எஸ், தசப்பா, பாலராம் பி, ஹேமலதா மிஷி, சட்டோபாத்யாயா கே, பிரதீப் டி சாவ்கர், மனோகரன் ஆகியோரும் உள்ளனர்.
இந்திய ஐடி துறையில் புகழ்பெற்ற நபரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இன்ஃபோசிஸை நாராயணமூர்த்தி உடன் இணைந்து நிறுவியது மட்டும் அல்லாமல் 2011 முதல் 2014 வரை துணைத் தலைவராகவும், 2007 முதல் 2011 வரை சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.
ஐடி துறையில் இவரது குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கியது.
ஐஐஎஸ்சி கல்லூரியின் டிரஸ்டி குழு உறுப்பினரான கோபாலகிருஷ்ணன் இந்த வழக்கில் தொடர்புடையதால் இந்த வழக்கில் இவர் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கோபாலகிருஷ்ணன் அல்லது ஐஐஎஸ்சி தரப்பில் இருந்து எவ்விதமான விளக்கமும் வெளியிடவில்லை.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications