டெக் துறையில் பணி நீக்கம் என்பது இன்று வரையில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்கள் தொடங்கி, ஸ்டார்ட் அப்கள் வரையில் பணி நீக்கம் செய்து வருகின்றன.
இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நீடிக்குமோ? என்ற கேள்வியும் டெக் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில் இது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலாகிருஷ்ணன், பணி நீக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் தவிர்க்க முடியாதது?
கிரேட் பிளேஸ் டூ ஓர்க் (Great place to work 2023) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், பணி நீக்கங்கள் விரும்பத்தகாதவை என்றாலும், அவை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம்
ஐடி துறையில் கடந்த 4 தசாப்தங்களாக 5 லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தொடர்ந்து ஊழியர்களை சேர்த்து வருகின்றது. இவர்களில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிக துரதிஷ்டவசமானது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். எனினும் பணி நீக்கத்திற்கான காரணத்தையும் புரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று.
செலவை குறைக்க நடவடிக்கை
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக நிறுவன வாரியங்கள் செலவு குறைப்பு நடவடிக்கை முடிவு செய்தால், அவர்களுக்கு உள்ள ஒரு எளிதான வழி பணி நீக்கம் தான். இதன் மூலம் அவர்கள் உடனடியாக செலவை குறைக்க முடியும். இதன் மூலம் உடனடியாக செலவு குறைப்பு இலக்கினை அடைய முடியும்.
மனிதாபிமான அடிப்படை
ஆனால் இது இயந்திரத்தனமான ஒன்று. கண்மூடித்தனமான ஒன்று. இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். அதேசமயம் மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் செயல்பட்டால் அதுவும் பிரச்சனையிலேயே முடியும். ஆக இது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவிலும் பணி நீக்கம்
அதேசமயம் சிலரை தக்க வைத்துக் கொள்ள சம்பள குறைப்பையும் செய்ய வேண்டும். சமீப காலமாகவே கூகுள் முதல் தொடங்கி அமேசான், டிஸ்னி வரையில் பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது. இந்தியாவிலும் ஐடி நிறுவனங்கள் சில தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
இன்ஃபோசிஸ் பணி நீக்கம்
சில தினங்களுக்கு முன்பு தான் இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் இன்டெர்னல் தேர்வில் தேர்ச்சி பெறாத 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியானது.
ஃப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியதால் இந்த நிறுவனம் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணியாளர்களின் திறமையை சோதிக்க இந்த தேர்வை நடத்திய நிலையில், அதில் தோல்வியடைந்த சுமார் 400 பேரை தற்போது பணியில் இருந்து நீக்கி உள்ளது. இதற்கு முன் 208 புதியவர்கள் எஃப் ஏ தேர்வில் தோல்வியடைந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications