இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் எஸ்டி சிபுலாலின் குடும்பத்தினர் நிறுவனத்தில் அவர்களுக்கு சொந்தமாக இருந்த சுமார் 13 .86 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 7 பொறியாளர்கள் இணைந்து 1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினர்.
முதலில் புனேவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நாராயணமூர்த்தி, நந்தன் நீலகேணி, கோபாலகிருஷ்ணன் ,எஸ்டி சிபுலால் ,கே. தினேஷ், ராகவன், அசோக் அரோரா ஆகியோர் இணைந்து தான் இந்த நிறுவனத்தை தொடங்கினர். எனவே இவர்கள் அனைவருக்குமே இந்த நிறுவனத்தில் கணிசமான அளவு பங்கு இருக்கிறது.

நிறுவனர்களில் ஒருவரான எஸ்டி சிபுலால் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்போசிஸ் நிறுவனத்தில் தங்கள் வசம் இருந்த கணிசமான அளவு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக சிபுலால் அவர்களின் மகன் ஸ்ரேயாஸ் சிபுலால் வெளியிட்டுள்ள தகவலில், 13.86 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது. ஒரு பங்கின் மதிப்பு 1900 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்ததாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழலில் இது இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.03 சதவீதம் ஆகும். அதாவது மொத்தம் 263 கோடி ரூபாய்க்கு இந்த பங்கு விற்பனை நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் சிபுலால் குடும்பத்தினர் வசம் இருக்கும் பங்குகளின் சதவீதம் 0. 48 சதவீதம் என மாறி உள்ளது. சோழமண்டலம் செக்யூரிட்டி தரகு நிறுவனத்தின் வாயிலாக பங்குகள் விற்பனை ஆகி இருப்பது தெரியவந்துள்ளது.

சிபுலால், இன்போசிஸ் நிறுவனத்தை சர்வதேச அளவிலான ஐடி நிறுவனமாக வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் கடந்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வந்தவர். சிபுலால் அவர்களின் சொத்து மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாயாக இருக்கிறது.
இவர் தன்னுடைய தொழில் மட்டும் அல்லாது, ரியல் எஸ்டேட் துறையிலும் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டதில் பெயர் போனவர். இவருக்கு சொந்தமாக அமெரிக்காவின் சீயட்டில் பகுதியில் சுமார் 700 அப்பார்ட்மெண்டுகள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு 600 கோடி ஆகும் .
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications