இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் CEO ஆன எஸ்.டி. சிபுலால் குடும்ப உறுப்பினர் ஒருவர், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் இன்போசிஸ் பங்குகளின் ஒரு பகுதியை விற்பனை செய்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் சரிவைச் சந்தித்தது.
இன்போசிஸ் பங்குகள் பல மாதங்களாக புதிய வர்த்தகம் பெற முடியாமல் தவித்து வந்த நிலையில், இதன் பங்கு விலை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்தது. 2024ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு உயர்வு பாதையில் இருந்தது.

இந்த வாரத்தில் புதன்கிழமை சிறப்பான உயர்வைப் பதிவு செய்த இன்போசிஸ் பங்குகள் வியாழக்கிழமை எஸ்.டி. சிபுலால் குடும்ப உறுப்பினர் விற்பனையால், வெள்ளிக்கிழமை கணிசமான சரிவைப் பதிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 11.15 மணி நிலவரப்படி, இன்போசிஸ் பங்குகள் ரூ.1,446.65 க்கு வர்த்தகமாகி, முந்தைய தினத்தை விட 0.43 சதவீதம் குறைந்தன. இன்று அதிகப்படியாக ரூ.1,439.50 என்ற குறைவான விலை அளவீட்டைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31, 2024 நிலவரப்படி, இன்போசிஸ் நிறுவனர்கள் இந்நிறுவனத்தில் மொத்தம் 14.71 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். சிபுலால் குடும்பத்திடம் 52,08,673 பங்குகள் (0.14%) இருந்தன, அவரது மனைவி குமாரி சிபுலால்-யிடம் 49,45,935 பங்குகள் (0.13%) இருந்தன.
செய்திக்குறிப்பின்படி, இந்த பங்கு விற்பனை சோழமண்டலம் செக்யூரிட்டீஸ் லிமிடெட் மூலமாக நடைபெற்றது. மேலும் பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தனிப்பட்ட மற்றும் சமூக நல சேவைகளு்காக பயன்படுத்தப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கிறது.
சிபுலால்-ன் மகன் ஸ்ரேயாஸ் சிபுலாத்திடம் இன்போசிஸ் பங்குகளில் 0.57 சதவீதமும், மகள் ஸ்ருதி சிபுலாத்திடம் 0.07 சதவீதமும் உள்ளது. மேலும், சிபுலாத்தின் மருமகன் கௌரவ் மன்சந்தா 0.34 சதவீத பங்குகளையும், மருமகள் பைரவி 0.16 சதவீத பங்குகளையும் வைத்திருந்தனர். அவரது பேரன் மிலன் சிபுலாத்திடம் 0.18 சதவீத பங்குகளும், ஸ்ருதியின் மகள் நிக்கிதா சிபுலாத்தி மன்சந்தா 0.18 சதவீத பங்குகளையும் இந்த ஐடி நிறுவனத்தில் வைத்திருந்தனர்.


Click it and Unblock the Notifications