இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் ஹெச்-1பி விசா திட்டத்தில் நிலவும் கெடுபிடி காரணமாக புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது இனி ஹெச்1பி விசாவை நம்பி அமெரிக்காவில் வர்த்தகம் செய்யக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தனது காலாண்டு முடிவின் போது அறிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ஜெயேஷ் சங்கராஜ்கா, அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் தற்போது 24% பேர் மட்டுமே அங்கு நேரடியாக பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக இது 30% ஆக இருந்தது என்றும் விளக்கியுள்ளார்.

இதன் மூலம் புதிதாக ஊழியர்களை இந்தியாவில் இருந்து அனுப்பும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதும், ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய ஊழியர்களையும் இந்தியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டு உள்ளதும் உறுதியாகியுள்ளது. இன்போசிஸ் ஊழியர்கள் பலரும் இதை உறுதி செய்துள்ளனர், அதேபோல் ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்யப்படும் அளவும் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
இத்தகைய மாற்றம் விசா விண்ணப்பம் கட்டணம் உயரும் போதே எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது டிரம்ப் தலைமையிலான ஆட்சி ஹெச்1பி விசாவுக்கு பெரும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்கூட்டியே அதிகப்படியான ஊழியர்களை அமெரிக்காவில் இன்போசிஸ் நிர்வாகம் குறைத்துள்ளது.
ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா திட்டத்தில் சமீபத்தில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகள் மற்றும் சவால்களை கருத்தில் கொண்டு, இன்போசிஸ் ஹெச்1பி விசா-வை நம்பியிருக்கும் நிலையை குறைத்துள்ளது.
மேலும் அமெரிக்க வர்த்தகத்தைத் தொடர்ந்து மேம்பட்ட முறையில் நிர்வாகம் செய்ய இன்ஃபோசிஸ் அமெரிக்காவிற்கு அருகிலுள்ள நாடுகளில் திறமையான தொழிலாளர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் இனி வரும் காலகட்டத்தில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இதை தாண்டி கடந்த 5 வருடங்களாக இன்போசிஸ் மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் செயல்படும் பல இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அந்நாட்டு ஊழியர்களை அதிகம் நியமிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளனர். இந்த மாற்றத்தால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வேலை வாய்ப்பும் வாய்ப்பு ஐடி ஊழியர்களுக்குக் குறையும்.
இதை இன்போசிஸ் மட்டும் அல்லாமல் ஹெச்.சி.எல்.டெக் போன்ற பிற இந்திய ஐடி நிறுவனங்களும் ஹெச்-1பி விசாக்களை சார்ந்து இருக்கும் நிலையைக் குறைத்து வருகின்றனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications