இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்போசிஸ் நீண்ட தாமத்திற்கு பின்பு வெளியிட்டுள்ள ஜூன் காலாண்டு முடிவில், தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்தது போலவே முதலீட்டாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது.
ஜூன் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 5,945 கோடி ரூபாயை மொத்த லாபமாக பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டின் 5360 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் மொத்த வருமானம் 9.5 சதவீதம் அதிகரித்து 38,494 கோடி ரூபாயாக உள்ளது, இது மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிலையில் இன்போசிஸ் 2024 ஆம் நிதியாண்டில் வருவாய் வளர்ச்சியை முன்பு 4 - 7 சதவீதம் வரையில் உயரும் என கணிப்பை வெளியிட்ட இன்போசிஸ் ஜூன் காலாண்டில் வெறும் 1 - 3.5 சதவீதம் வரையில் மட்டுமே வளர்ச்சி அடையும் என அறிவித்துள்ளது. முந்தைய கணிப்பின் குறைந்தப்பட்ச அளவீட்டை விடவும் குறைவாக புதிய வளர்ச்சி அளவீட்டின் அதிகப்பட்சமாக அறிவித்துள்ளது.
ஐடி சேவை துறையில் புதிய வர்த்தகம் பெறுவதில் கடுமையான சூழ்நிலை நிலவும் காரணத்தால் இன்போசிஸ் தனது வருவாய் வளர்ச்சி அளவீட்டை பெரிய அளவில் குறைத்துள்ளது. இது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக பார்க்கப்படும் காரணத்தால் வெள்ளிக்கிழமை இன்போசிஸ் பங்குகள் அதிகப்படியான சரிவை எதிர்கொள்ள நேரிடும் என கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 7.25 சதவீதம் வரையில் சரிந்து 1343 ரூபாயாக உள்ளது. மேலும் இன்று காலை அதிகப்படியாக 1311.60 ரூபாய் வரையில் சரிந்துள்ளது, இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய முதலீட்டாளர்களை அதிகளவில் பாதித்துள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த சரிவை சமாளித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவிலான நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.
ஜூன் காலாண்டில் நிதி சேவை துறை மற்றும் கம்யூனிகேஷன் பிரிவுகளின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு உள்ளது, மற்ற துறைகள் அனைத்தும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்போசிஸ் நிதி சேவை பிரிவின் வருவாய் 4.7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இதை தொடர்ந்து கம்யூனிகேஷன் பிரிவு 6.1 சதவீதம் சரிவு. உற்பத்திப் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு 21.3 சதவிகிதம் வளர்ச்சி, லைப்சையின்ஸ் பிரிவும் ஆண்டுக்கு 14.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பிற பிரிவுகளின் வருவாய் ஆண்டுக்கு 28 சதவீதம் உயர்ந்துள்ளது. ரீடைல் பிரிவு 4 சதவீதமும், ஹைடெக் பிரிவு 2.5 சதவீதமும் ஜூன் காலாண்டில் உயர்ந்துள்ளது.
ஜூன் காலாண்டில் சுமார் 99 வாடிக்கையாளர்களை பெற்ற இன்போசிஸ், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 106 வாடிக்கையாளர்களை பெற்றது. மார்ச் காலாண்டில் 115 வாடிக்கையாளர்களை பெற்றது. இதன் மூலம் ஜூன் 30ஆம் தேதி முடிவில் சுமார் 1883 ஆக்டிவ் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது இன்போசிஸ். மார்ச் 31, 2023 முடிவில் 1,872 வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications