இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் செப்டம்பர் காலாண்டுக்கான ஊழியர்களின் வேரியபிபள் பே தொகை 60 சதவீதமாகக் குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர் வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக உள்ளது.
இந்த நிலையில் விப்ரோ கடந்த காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்போசிஸ் தற்போது அறிவித்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் ஒருபக்கம் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள ஊழியர்களுக்கு முன்லைட்டிங் செய்ய அனுமதி அளிப்பது முதல் வொர்க் ப்ரம் ஹோம் சலுகை தொடர்வது வரையில் பலவற்றை அறிவித்துவிட்டு, ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் தொகையைக் கைப்பற்றியுள்ளது.
வேரியபிள் பே
நவம்பர் 3ஆம் தேதி வெளியான தகவல் படி இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேரியபிள் பே தொகையில் 60 சதவீதம் மட்டுமே அளிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகப் பிஸ்னஸ் டுடே தெரிவித்துள்ளது. வேரியபிள் பே என்பது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் 10 முதல் 20 சதவீதம்.
யாருக்கெல்லாம் பாதிப்பு..?
வேரியபிள் பே தொகையில் 60 சதவீதம் குறைப்பு இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இல்லை, இன்போசிஸ் BPM பிரிவு ஊழியர்களுக்கு மட்டுமே. இன்போசிஸ் நிறுவனத்தின் BPM பிரிவில் மட்டும் உலகளவில் 50000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பெரும் பகுதி வெளிநாட்டில் உள்ளனர்.
ஜூன் காலாண்டில் இன்போசிஸ் அனைத்து ஊழியர்களுக்கும் 70 சதவீதம் மட்டுமே வேரியபிள் பே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
J4, J5, J6 பிரிவு ஊழியர்கள்
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள தரவுகள் படி J4, J5, J6 பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்கள் அனைவருக்கும் 60 சதவீதம் வரையிலான வேரியபிள் பே மட்டுமே அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
வருவாய், லாபம்
இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 36,538 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் லாப அளவில் 11 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 6021 கோடி ரூபாயைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
ரெசிஷன் அச்சம்
ஐடி நிறுவனங்களுக்கு இந்த ரெசிஷன் அச்சம் நிறைந்த காலகட்டத்தில் மார்ஜின் அளவை காப்பாற்றுவது பெரும் பிரச்சனையாக உள்ளது, இதோடு ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் காரணத்தால் அதிகப் பணத்தை முதலீடு செய்து புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
வெளியேற்ற விகிதம்
செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 28.4 சதவீதத்தில் இருந்து 27.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதன் சக போட்டி நிறுவனங்களான விப்ரோ 23 சதவீதமாக, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 23.8 சதவீதமாகவும், டிசிஎஸ்-ன் 21.5 சதவீதமாகவும் உள்ளது.
டெக் மஹிந்திரா
இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா-வின் ஊழியர்களின் வெளியேற்ற விகிதம் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஜூன் காலாண்டில் இதன் அளவு 22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனத்தில் டெக் மஹிந்திரா தான் குறைவான அட்ரிஷன் விகிதத்தைக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications