இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்போசிஸ் அதிகப்படியான அட்ரிஷன் விகித்தை எதிர்கொண்டு இருக்கும் இதேவேளையில் மூன்லைட்டிங் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
இதை சமாளிக்க இன்போசிஸ் எடுத்த இரு முக்கியமான நடவடிக்கைகள் தற்போது ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஊழியர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார்கள்.
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில் இன்போசிஸ் மட்டும் ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அலுவலகம் வந்தால் போதும் என்று அறிவித்துள்ளது. இன்போசிஸ் அறிவிப்பு பிற ஐடி சேவை நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
முன்லைட்டிங்
இதேபோல் முன்லைட்டிங் பிரச்சனையை இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் மூலம எதிர்கொண்டு வரும் நிலையில் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் தனது ஊழியர்களுக்கு ப்ரீலான்சிங் வேலையை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இன்போசிஸ்
இவ்விரு முடிவுகளும் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்டிரிஷன் அளவுகளையும், மூன்லைட்டிங் பிரச்சனைகளையும் தீர்த்தாலும், 227 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறையின் பிற ஐடி நிறுவனங்களும் இதை பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.
ஊழியர்கள் ராஜினாமா
ஏற்கனவே ஐடி ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்த காரணத்தால் ஊழியர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் வந்துள்ள நிலையில், இன்போசிஸ் அறிவித்துள்ள இவ்விரு சலுகை காரணமாக பெரும்பாலான ஐடி ஊழியர்கள் இன்போசிஸ் பணியில் சேரும் நிலை உருவாகும்.
டிசிஎஸ், விப்ரோ
இது கட்டாயம் ஐடி நிறுவனங்கள் மத்தியில் போட்டியை உருவாக்கும், இதனால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். மேலும் டிசிஎஸ், விப்ரோ ஆகியவை கட்டாயம் தனது முடிவில் இருந்து பின்வாங்காது, காரணம் முன்லைட்டிங்-ஐ இவ்விரு நிறுவனங்களும் பெரும் குற்றமாக பார்க்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications