இன்ஃபோசிஸ் அறிவிப்பால் கடுப்பான பிரெஷ்ஷர்கள்.. வேலை கிடைத்தும் பயனில்லையே.. !

சமீபத்திய மாதங்களாகவே ஐடி துறையினருக்கு இது போறாத காலம் எனலாம். சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், டெக் நிறுவனங்கள் பெரும் சரிவினைக் எதிர்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில் பணியமர்த்தலை வெகுவாக குறைத்துள்ளன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்களது பணியமர்த்தலை மெதுவாக்கியுள்ளன.

சொல்லப்போனால் ஏற்கனவே பணிக்காக தேர்தெடுக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், அனுபவம் இல்லாத பிரெஷ்ஷர்கள் என பலருக்கும், பணி ஆர்டரை கொடுத்துள்ள நிறுவனங்கள், பணிக்கு அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.

வேலை கிடைத்தும் வேலைக்கு செல்ல முடியவில்லை

வேலை கிடைத்தும் வேலைக்கு செல்ல முடியவில்லை

இதனால் பல ஊழியர்கள் வேலை கிடைத்தும் பணிக்கு செல்ல முடியாத நிலையே இருந்து வருகின்றது. சமீபத்தில் வெளியான ஓரு செய்தியொன்றில் ஐடி துறையை சேர்ந்த பிரெஷ்ஷர் ஒருவர் கையில் 3 பணி நியமன ஆர்டர்களை வைத்திருந்தும் அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை என கூறியிருந்தார். இது தான் இன்றைய ஐடி துறையின் நிலை என்றே கூறலாம்.

பணி ஆர்டர் ரத்தா?

பணி ஆர்டர் ரத்தா?

ஏற்கனவே மந்த நிலையால் வாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், நிறுவனங்கள் இதுபோன்ற சிக்கலையும் இந்த சமயத்தில் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையை விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளன. இவை கொடுத்த பணி ஆர்டரையே ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது.

4 முறையாக தள்ளி வைப்பு

4 முறையாக தள்ளி வைப்பு

அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஏற்கனவே சில முறை புதியதாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு இணையும் தேதிகளை மாற்றிக் கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது கடந்த 4 மாதங்களில் 4 முறையாக இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரும் சிரமம்

பெரும் சிரமம்

பாதிக்கப்பட்ட ஊழியர்கள், 4வது முறையாக இன்ஃபோசிஸ் தேதிகளை மாற்றிக் கொடுத்துள்ளது. இதனால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 12, 2022 தேதிக்கு மாற்றப்பட்ட தேதி, தற்போது மீண்டும் டிசம்பர் 19 ஆக மாற்றப்பட்டுள்ளது. சிலருக்கு ஜனவரி மாதங்களில் கூட தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஐடி ஊழியர்கள் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் புதிய வேலை தேடிக் கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது எனலாம்.

வேறு ஆப்சன் உண்டா?

வேறு ஆப்சன் உண்டா?

இந்த போக்கானது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மட்டும் அல்ல, விப்ரோ, டெக் மகேந்திரா, அசெஞ்சர், கேப்கெமினி, மைண்ட் ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .

இதனால் ஐடி ஊழியர்கள் வேறு ஆப்சனை தேட தொடங்கியுள்ளனர். எனினும் இந்த காலகட்டத்தில் அது மிக சிரரமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+