பெங்களூரு: இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், கடந்த சில வருடங்களாகவே புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த வேளையில் 2024 ஆம் ஆண்டில் நிலைமை மாறி அடுத்தடுத்து புது வர்த்தகத்தைப் பெற துவங்கியுள்ளது. இந்த நிலையில் குளிர்பான நிறுவனமான கோகோ கோலா மற்றும் மைக்ரோசாப்ட் மத்தியிலான ஒரு டெக்னாலஜி ஒப்பந்தத்தில் இன்போசிஸ் கேப்பில் கெடா வெட்டியது போல் பெரும் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
கோகோ-கோலா நிறுவனம் ஏப்ரல் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய கிளவுட் மைக்ரேஷன் ஒப்பந்தத்தில் இன்போசிஸ் நிறுவனம் சப்போர்ட்டிங் பார்ட்னராக இணைந்தது. இந்த ஒப்பந்தம் வாயிலாக சுமார் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தையில் (SEC) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் படி, இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் 27 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இந்த ஒப்பந்தம் வாயிலாக இன்போசிஸ் பெற உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இன்போசிஸ் மற்ற பிராந்தியங்களின் கிளவுட் மைக்ரேஷன் பணியில் பணியாற்றியிருந்தால், உலகளாவிய வர்த்தகத்திற்கு மொத்தத்தில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஈட்டியிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கிளவுட் மைக்ரேஷன் ஒப்பந்தங்களில் சுமார் 15-20 சதவிகிதம் தொகை இன்போசிஸ்-க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், கோகோ-கோலா நிறுவனத்தின் துணை நிறுவனமான கோகோ-கோலா ஐரோப்பா பசிபிக் பார்ட்னர்ஸ் பிஎல்சி வெளியிட்ட அறிக்கையில், "2024-ஆம் ஆண்டு முதல் பாதியில், ஆறு ஆண்டுகளுக்கு Azure கிளவுட் மைக்ரேஷன் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் 167 மில்லியன் யூரோ முதலீடு செய்ய ஒப்புதல் அளித்தோம். மேலும், இதில் சப்போர்ட்டிங் பார்ட்னராக இன்போசிஸ் நிறுவனத்திற்கு 25 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஈஐஐஆர் டிரெண்ட் இன்ஜினியரிங் இன்சைட் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பரீக் ஜெயின் கூறுகையில், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது என எதிரிவித்தார்.
இன்போசிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து AI அடிப்படையிலான அணுகுமுறையை முதன்மையானதாகக் கொண்ட அடுத்த தலைமை ஏஐ சேவைகளை உருவாக்கி அதன் மூலம் தனது வர்த்தகம் வருவாய் ஆதாரங்களை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.


Click it and Unblock the Notifications