இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில், வேரியபிள் பே குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
பெரும்பாலான ஐடி ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான சம்பளம் வேரியபிள் பே பிரிவில் லாக் செய்யப்பட்டு ஒவ்வொரு காலாண்டுக்கும், ஊழியரின் செயல்திறன், ஊழியர் பணியாற்றும் அணியில் செயல்திறன், நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் இந்த தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் 2வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு மார்ச் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையை அளிப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது 3,43,234 ஊழியர்கள் உள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவல் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கான வேரியபிள் பே சராசரியாக 60 சதவீதம் மட்டுமே அளிக்கப்படுவதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்புகள் ஊழியர்கள் மே 19 ஆம் தேதி அனுப்பப்படும் என தெரிகிறது, மேலும் வேரியபிள் பே மே மாதம் சம்பளத்துடன் சேர்த்து அனுப்பப்படும். அதாவது மே மாதத்தின் கடைசி வேலை நாளில் அனுப்பப்படும்.
மே 14 ஆம் தேதி இன்போசிஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, மே 12 ஆம் தேதி நிறுவனத்தில் தகுதியான ஊழியர்களுக்கு 5,11,862 பங்குகளை Restricted Stock Units ஆக வழங்கப்பட்டது என தெரிவித்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.21 லட்சம் கோடி ரூபாயாகும்.
இதேவேளையில் விப்ரோ நிறுவனம் சுமார் 80 சதவீத வேரியபிள் பே தொகை அளிக்க உள்ளதாகவும், கடந்த ஆண்டை போலவே சம்பளம் உயர்வு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியான போது இன்போசிஸ் ஊழியர்களின் செயல்திறன் குறித்த நிர்வாகம் கவலை அடைந்தது. இதை மேம்படுத்த முதல் கட்டமாக இன்போசிஸ் நிர்வாகம் ஊழியர்களின் செயல்திறனை அதிகரித்த 90 சதவீத ஊழியர்களை வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற விதிமுறையை கடந்த வாரம் நடைமுறைப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications