இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்கள் மூன்லைட்டிங் பிரச்சனைகளுக்குப் பின்பு பல மாற்றங்களை, கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது.
குறிப்பாகப் பெரும்பாலான நிறுவனங்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்குக் கட்டாயம் வர வேண்டும் என்ற விதிமுறையை முன்வைத்துள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கும் வேளையில் இன்போசிஸ் தரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
குறிப்பாகக் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட பின்பு இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்க உள்ளது.
மூன்லைட்டிங்
இன்போசிஸ் நிறுவனம் நேற்று காலாண்டு முடிவை வெளியிட்ட போது விப்ரோ நிறுவனம் மூன்லைட்டிங் செய்ய 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது போலவே இன்போசிஸ் நிறுவனமும் ஓரே நேரத்தில் இரண்டு நிறுவனத்தின் (குறிப்பாகச் சக போட்டி நிறுவனங்களில்) பணியாற்றிய ஊழியர்களை நிறுவன விதிமுறைகளை மீறியதற்காகப் பணிநீக்கம் செய்துள்ளது என அறிவித்தது.
வெளியேற்ற விகிதம்
இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 28.4 சதவீதத்தில் இருந்து 27.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் விப்ரோ-வின் 23 சதவீதமாக, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-ன் 23.8 சதவீதம், டிசிஎஸ்-ன் 21.5 சதவீதம் ஒப்பிடும் போது டாப் 4 நிறுவனங்களில் அதிக அட்ரிஷன் அளவை கொண்டு உள்ளது இன்போசிஸ் தான்.
flexible approach தேர்வு
இப்படி மூன்லைட்டிங் மற்றும் அட்ரிஷன் விகித அளவுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு இருக்கும் இன்போசிஸ் பிற ஐடி நிறுவனங்களைப் போல் அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் எனக் கட்டாயம் விதிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து ஊழியர்களை அலுவலகத்தில் அழைப்பதில் flexible approach நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளார் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்.
45000 ஊழியர்கள் அலுவலகத்தில்
இன்போசிஸ் இந்திய அலுவலகத்தில் தற்போது தினமும் 45000 ஊழியர்களுக்கும் அதிகமானோர் அலுவலகம் வந்து பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கை சில நாட்களுக்கு முன்பு மிகவும் குறைவாக இருந்தது, தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் அனைவருக்கும் எதுவான ஒரு முறையைக் கொண்டு வர இன்போசிஸ் முயற்சி செய்கிறது எனச் சலில் பாரிக் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் ஊழியர்கள்
இதனால் இன்போசிஸ் ஊழியர்கள் தங்களது விருப்பம் போல் தேவைப்படும் நாட்களில் அலுவலகத்திற்கும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தும் பணியாற்ற முடியும். இது டிசிஎஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது, இது உண்மையில் இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆகவே பார்க்கப்படுகிறது. நீங்க என்ன நினைக்கிறீர்கள் கமெண்ட் பண்ணுங்க.
இன்போசிஸ் திட்டம்
இன்போசிஸ் நடப்பு நிதியாண்டில் 50000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமிட்டு இருந்து நிலையில், முதல் 6 மாதத்தில் 40000 பேரை பணியில் சேர்த்துள்ளது. மீதமுள்ள 10000 பேரையும், தற்போது உள்ள ஊழியர்கள் வெளியேறுவதில் இருந்து நிறுத்துவதன் மூலம் 27.1 சதவீத அட்ரிஷன் விகிதத்தைக் குறைக்க முடியும் என இன்போசிஸ் நம்புகிறது.


Click it and Unblock the Notifications