இந்திய ஐடி சேவை துறையில் டிசிஎஸ், ஹெச்சிஎல் தொடர்ந்து இன்போசிஸ் இன்று தனது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது. இக்காலாண்டு முடிவில் இன்போசிஸ் ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்த சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தை போலவே ஊழியர்களுக்கான அடுத்த சம்பள உயர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகி தெரிவித்துள்ளார். இதனால் இன்போசிஸ் ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இன்போசிஸின் தலைமை நிதி அதிகாரி (CFO) ஜெயேஷ் சங்க்ராஜ்கா காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊழியர்களுக்கு காலாண்டு வாரியாக வழங்கப்படும் அதிகப்படியான வேரியபிள் சம்பளத்தை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். இதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில், இன்ஃபோசிஸ் தனது சம்பள உயர்வு திட்டத்தை இரண்டு கட்டங்களில் அமல்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதில் முதல் கட்டம் ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வந்து, இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலாகியுள்ளது. சம்பள உயர்வு, அதிகப்படியான வேரியபிள் பே ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் லாப மார்ஜின் தொகையில் 100 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளதாகவும் ஜெயேஷ் சங்க்ராஜ்கா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த சம்பள உயர்வு, அதிகப்படியான வேரியபிள் பே ஆகியவை இன்போசிஸ் ஊழியர்களின் பணி திருப்தியை மேம்படுத்துவதற்கு உதவியுள்ளதாக நிர்வாகம் நம்பப்படுகிறது, ஆனால் அடுத்த கட்ட உயர்வு எப்போது என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு இல்லை.
இன்ஃபோசிஸ் நிறுவனம், ஜூன் மாதத்தில் முடிந்த முதல் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாப அளவு வருடாந்திர அடிப்படையில் 9% உயர்ந்து ரூ.6,921 கோடியாக உள்ளது. இதேபோல், ஆப்ரேட்டிங் வருவாய் 8% உயர்ந்து ரூ.42,279 கோடியை எட்டியுள்ளது.
இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர் வெளியேற்ற விகிதம் (attrition rate) ஜூன் 2025 காலாண்டில் 14.4% ஆக உயர்ந்துள்ளது, இது மார்ச் 2025 இல் 14.1% ஆக இருந்ததை விட 0.30% அதிகமாகும்.
மேலும் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை ஜூன் 2025 காலாண்டு முடிவில் 323,788 ஆக உள்ளது, இது மார்ச் 2025 இல் 323,578 ஆகவும், ஜூன் 2024 இல் 315,332 ஆகவும் இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 8,456 புதிய ஊழியர்களை சேர்ந்துள்ளனர்.
ஆனால் ஊழியர் வெளியேற்ற விகிதம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 12.7% ஆக இருந்ததை விட தற்போது 170 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து ள்ளது, 14.4% ஆக உயர்ந்துள்ளது. இந்த குறைக்கவே அதிகப்படியான வேரியபிள் பே மற்றம் சம்பள உயர்வை இன்போசிஸ் நிர்வாகம் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications