இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், கடந்த வாரம் அனைத்து ஊழியர்களும், திட்ட மேலாளர்களுக்கும் முக்கியமான தகவல்களை அளித்தது.
ஆம் கடந்த 1.5 வருடமாக இன்போசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையிலும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலும், ஊழியர்களைத் திரும்பவும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் வர்த்தகம் மற்றும் பணிகளுக்கு ஏற்ப அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயம் இருப்பின் டீம் உறுப்பினர்களைத் தேர்வு செய்து அழைக்கலாம். அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா வேக்சின் கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் எனவும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
WFH கட்
மேலும் டீம் உறுப்பினர் கட்டாயம் வரவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் வாடிக்கையாளர் தேவை இருப்பின் அலுவலக்கிற்கு வரலாம் என்ற தளர்வு அளித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம். மேலும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கொடுத்துள்ளது.
முன் ஏற்பாடுகள்
நீண்ட காலத்திற்குப் பின்பு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் காரணத்தாலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது இன்போசிஸ்.
பிரஷ்ஷர்கள்
இது ஒருபுறம் இருக்கப் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தையும் ஆலோசனை செய்து வருகிறது இன்போசிஸ். குறிப்பாகப் பிரஷ்ஷர்களை அழைக்கத் திட்டமிட்டு வருகிறது.
இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டிசிஎஸ்
இந்தியாவில் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வேக்சின் அளித்து வரும் காரணத்தால் தற்போது இன்போசிஸ் உட்பட விப்ரோ, ஹெச்சிஎல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications