இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான பர்பாமென்ஸ் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
ஐடி ஊழியர்கள் பொறுத்த வரையில் வருடத்தின் இறுதியில் சம்பள உயர்வுக்காக காத்திருப்பது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு காலாண்டு இறுதியில் அளிக்கப்படும் பர்பாமென்ஸ் போனஸ் தொகைக்காக காத்திருக்கின்றனர். இதை பர்பாமென்ஸ் போனஸ் அல்லது வேரியபிள் பே என அழைப்பது உண்டு, இது ஒவ்வொரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 20-30 சதவீதம் இப்பிரிவில் வழங்கப்படும்.

இது ஊழியரின் செயல்திறன், ஊழியர் பணியாற்றும் அணியின் செயல்திறன், எனப் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. இந்த 20-30 சதவீத சம்பளத்தை 4 காலாண்டுகளாகப் பிரித்து அளிக்கப்படும். அந்த வகையில் இன்போசிஸ் ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான வேரியபிள் பே அல்லது பர்பாமென்ஸ் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் அறிவிப்புப் படி இந்த காலாண்டுக்கு PL6 அதாவது மேனேஜர் பதவியில் இருந்து அதற்கு கீழ் பதவியில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எதிர்பார்ப்பைக் குறைக்கும் போனஸ்: இந்த போனஸ் அறிவிப்பில், 2024 நிதிய ஆண்டின் கடைசி காலாண்டிற்கான ஊழியர்களுக்குச் சராசரியாக வேரியபிள் பே தொகை 60% ஆக குறைந்துள்ளதாகப் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த காலாண்டுகளுடன் ஒப்பீடு: இதற்கு முன்பு, இன்போசிஸ் அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கு 73% சராசரி அளவீட்டையும், செப்டம்பர் காலாண்டில் 80% அளவீட்டையும், மார்ச் காலாண்டில் 75% என வேரியபிள் பே தொகையை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் நிதியாண்டில் மிகவும் மோசமான நிலையில் வெறும் 60 சதவீதம் அளிக்கப்பட்டு உள்ளது.
வேரியபிள் பே தொகையில் வேறுபாடு: PL6 (PL6- மேனேஜ்) மற்றும் அதற்கும் கீழான ஊழியர்கள் (பிரஷ்ஷர்ஸ் பணியாளர்கள் தவிர) 55% முதல் 85% வரையில் பணம் பெற தகுதியுடையவர்கள். அதாவது, PL 4, 5 மற்றும் 6 நிலைகளில் உள்ள ஊழியர்கள் முறையே சராசரியாக 70%, 65% மற்றும் 57% போனஸ் பெறுவதாகத் தெரிகிறது.
வேரியபிள் பே குறித்து ஊழியர்களுக்கு தனித்தனி மின்னஞ்சல்கள் மூலம் அவர்கள் பெறும் தொகையைத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய சிலருக்கு மட்டும் 75% முதல் 85% வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
வேரியபிள் பே குறைந்தது ஏன்?: இன்ஃபோசிஸ் நிறுவனம் போனஸ் தொகையைக் குறைத்ததற்கான காரணங்கள் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
ஊழியர்களின் கவலை: வேரியபிள் பே தொகை குறைக்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இது ஊழியர்களின் மன உறுதியையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வேரியபிள் பே தொகை மே மாத சம்பளத்துடன் கிடைக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications