எவ்வளவு பெரிய முட்டுக்கட்டைகளும் சவால்களும் வந்தாலும் அதை சந்திக்கத் துணிவிருக்கும் மனம் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு தாதாசாகேப் பகத்தின் வெற்றிக்கதைதான்.
இன்போசிஸில் ஆபீஸ் பையனாக பகத் வேலை பார்த்து வந்தார். இப்போது அவரது ஸ்டார்அப்களுக்கு சிஇஓவாக உள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மேட் இன் இந்தியா கான்வாவை வெளியுலகத்துக்குக் கொண்டுவந்த பகத்தின் வெற்றிச் சரித்திரத்தைப் பார்க்கலாம்.

மகாராஷ்டிர மாநிலம் பீட்-ஐ (BEED) சேர்ந்தவர் தாதாசாகேப் பகத். 1994இல் பிறந்தவர். தனது கிராமத்தில் இருந்து குடிபெயர்ந்து புனேவுக்கு வந்தார். பள்ளிக் கல்வியை முடித்தவுடன் புதிய பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார்.
ரூ.9000 சம்பளத்தில் ரூம் சர்வீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தார். ஐடிஐ டிப்ளமோவை முடித்தார். ஆனால் தொழில்துறையில் சேராமல் அவர் இன்போசிஸ் கெஸ்ட் ஹவுசில் வேலைக்கு சேர்ந்தார். கெஸ்ட் ஹவுசில் தங்கியிருப்பவர்களுக்குத் தேவையான வேலைகளை பார்த்துவிட்டு டீ, தண்ணீர் வழங்கும் வேலையில் இருந்தார். அங்கு வேலைபார்த்தபோது சாப்ட்வேரின் முக்கியத்துவத்தை உணர்ந்த பகத்துக்கு அந்தத் துறையில் ஆர்வம் வந்தது.
கார்ப்பரேட் உலகைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். ஆனால் அவர் கல்லூரிப் படிப்பை முடிக்காததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அனிமேஷன் மற்றும் டிசைனில் படிக்கத் தொடங்கினார். இரவில் வேலை பார்த்துவிட்டு பகலில் அனிமேஷன் கல்வியை படித்தார். அந்தப் படிப்பை முடித்துவிட்டு மும்பையில் ஒரு உண்மையான வேலையில் சேர்ந்தார். அதைவிட்டுவிட்டு பின்னர் ஹைதராபாத்துக்கு சென்றார்.
அங்கு அவர் பைதான் மற்றும் சிபிளஸ்பிளஸ் படித்தார். ஒரு டிசைன் மற்றும் கிராபிக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் பல விஷுவல் எபக்ட்களை உருவாக்க ஏகப்பட்ட நேரம் தேவை என்பதால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளெட் லைப்ரரியை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்பதை பகத் உணர்ந்தார். அவரே இதுபோன்ற டெம்ப்ளெட் லைப்ரரியை உருவாக்கி ஆன்லைனில் மார்க்கெட் செய்தார்.
துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு விபத்துக்குள்ளானார். படுக்கையில் அவர் கிடக்க வேண்டியிருந்தது. அப்போது தனது முழு கவனத்தையும் டிசைன் லைப்பரிகளை உருவாக்குவதில் குவித்தார். 2015இல் நைன்த்மோஷன் என்ற முதல் நிறுவனத்தை தொடங்கினார். குறுகிய காலத்திலேயே உலக அளவில் பிபிசி ஸ்டூடியோ, 9XM மியூசிக் சேனல் உள்பட 6000 கிளையன்ட்களுக்கு அவர் சேவை புரிந்தார்.
இந்நிலையில் கான்வாவுக்கு நிகரான ஒரு பிளாட்பார்மை உருவாக்க பகத் முடிவு செய்தார். கான்வா என்பது ஆன்லைன் கிராபிக் டிசைனாகும். இதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது நிறுவனம் DooGraphics உருவானது. இந்த பிளாட்பார்மில் டிராக் அண்டு டிராப் இன்டர்பேஸ் சிறப்பு அம்சம் இருந்தது.
இதனால் யூசர்கள் டெம்ப்ளெட்களையும் டிசைன்களையும் செய்ய முடிந்தது. இருப்பினும் கோவிட் பெருந்தொற்று காரணமாக அவர் தனது தொழிலை புனேயில் இருந்து செய்வதை விட்டுவிட்டு தனது கிராமமான பீட்டுக்குத் திரும்ப நேர்ந்தது.
அவரது கிராமத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாற்காலிகமாக பகத் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. மலை உச்சியில் 4ஜி நெட்வொர்க் கிடைத்ததால் ஒரு மாட்டு தொழுவத்தில் கடையைப் போட்டார்.
சில நண்பர்களுடன் சேர்ந்து பகத் அங்கு வேலை பார்த்தார். அனிமேஷன் மற்றும் டிசைனில் அவர் கல்வியறிவு இருந்ததால் உதவியாக இருந்தது. இதைத் தொடர்ந்து பீட் கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு DooGraphics பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு நல்ல காலம் பிறந்தது.
அடுத்த 6 மாதங்களில் 10000 ஆக்டிவ் யூசர்களைப் பெற்றார். மகாராஷ்டிரா, டெல்லி, பெங்களூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இடங்களில் இருந்து யூசர்கள் பெருகினர். DooGraphicsஐ முழுக்க முழுக்க ஒரு இந்திய சாப்ட்வேராக மாற்ற பகத் திட்டமிட்டார். உலகிலேயே மிகப் பெரிய டிசைன் போர்ட்டலாக உருவாக்கினார். இதன் மூலம் பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்துக்கு ஆதரவு தந்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications