இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரும், உலகளாவிய வியூக விற்பனைத் தலைவருமான ஹேமந்த் லம்பா வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ராஜினாமா செய்துள்ளார். இந்த அறிவிப்பு இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமா இன்போசிஸ் கடந்த 1.5 வருடத்தில் பல மூத்த அதிகாரிகளை இழந்துள்ளது. இந்த நிலையிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

இந்த நிலையில் ஹேமந்த் லம்பா ராஜினாமா செய்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் தாக்கல் செய்தது. இதில் "ஹேமந்த் லம்பா, மூத்த நிர்வாகப் பணியாளர், நிறுவனத்தின் சேவைகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்" என்று இன்ஃபோசிஸ் பிஎஸ்இ-க்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக்கிற்கு ஹேமந்த் லம்பா எழுதிய ராஜினாமா கடிதத்தில், "இன்ஃபோசிஸ் சேவையில் இருந்து ராஜினாமா செய்யும் எனது முடிவை உங்களுக்குத் தெரிவிக்கவே எழுதுகிறேன். பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்த வாய்ப்பு மற்றும் அனுபவங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களில் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து துணைத் தலைவர்களாக இருந்த ரவி குமார், மோஹித் ஜோஷி, வர்த்தக பிரிவில் தலைவராக இருந்த கே. கோபிகிருஷ்ணன் - இ.வி.பி & தலைவர், மனிதவள பரிவின் தலைவர் ரிச்சர்ட் லோபோ, கிளவுட் & இன்ஃப்ரா பிரிவின் தலைவர் மற்றும் இ.வி.பி நரசிம்ம ராவ் போன்ற உயர்மட்ட பணியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இவர்களுடன் விற்பனை பிரிவின் தலைவர் கபில் ஜெயின், CISO பிரிவின் தலைவர் விஷால் சால்வி, அக்கவுண்ட் விரிவாக்க பிரிவின் தலைவர் சார்லஸ் சலாமா, இன்டர்ஸ்ட்ரீ தலைவர் நாகேஷ்வர் செருக்கபள்ளி ஆகியோர் வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து, கடைசியாக டிசம்பர் 2023 இல் இன்போசிஸ்-ன் தலைமை நிதி தலைவரான நிலஞ்சன் ராய் ராஜினாமா செய்ததை அடுத்து மூத்த தலைவர்கள் வெளியேற்றம் முடிவுக்கு வந்தது என அனைவரும் நினைக்கும் போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரும், உலகளாவிய வியூக விற்பனைத் தலைவருமான ஹேமந்த் லம்பா வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ராஜினாமா செய்துள்ளார்.
பெரிய நிறுவனத்தில் மூத்த நிலைப் பதவியில் இருப்போர் வெளியேறுவது பொதுவான விஷயம் என்றாலும், ஆச்சரியப்படும் விதமாக அடுத்தடுத்து கூட்டம் கூட்டமாக வெளியேறுவது தான் ஆச்சரியம் அளிக்கிறது. இந்த நிலையில் ஹேமந்த் லம்பா வெளியேற்றத்தின் மூலம் ராஜினாமா 2.0 துவங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications