பெங்களூர்: பிரிட்டன் நாட்டின் பொது தேர்தல் முடிவுகள் இன்போசிஸ் குடும்பத்தில் பெரும் சோகத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரே வாரத்தில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி குடும்பம் உச்சக்கட்ட கொண்டாட்டத்திலிருந்து சோகத்திலும் கண்ணீரிலும் மூழ்கியது.
பிரிட்டன் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் பல அதிரடிகளைக் கிளப்பி வரும் வேளையில், 14 ஆண்டுகளுக்குப் பின்பு கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி ஆட்சியை அமைக்க உள்ளது. கெய்ர் ஸ்டார்மர்-ன் லேபர் கட்சி 650க்கு 410 இடங்களில் வெற்றிபெற்று இருக்கும் வேளையில் புதிய பிரதமராகத் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் கெய்ர் ஸ்டார்மரை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மோசமான நிலையில் 113 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆனால் ரிஷி சுனக் போட்டியிட்ட மேற்கு இங்கிலாந்தில் Richmond மற்றும் Northallerton தொகுதியில் 47.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்துள்ளார்.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயாண மூர்த்தியின் மருமகன் தான் ரிஷி சுனக். இவருடைய தோல்வி இன்போசிஸ் நாராயண மூர்த்தி குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிஷி சுனக் மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி இன்று வரையில் இன்போசிஸ் நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ளார்.
இந்த வாரத்தின் துவக்கத்தில் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினராக மார்ச் 14 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாகப் பாராளுமன்றத்தில் பேசினார். இந்த நிகழ்வை நாராயாண மூர்த்தியின் குடும்பம் மொத்தமும் கொண்டாடித் தீர்த்தது, அவரது மகன் ரோஹன் மூர்த்தி கூட சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து அடுத்த 2 நாளிலேயே நாராயண மூர்த்தி குடும்பத்தின் மொத்த கொண்டாட்டமும் சோகமாக மாறியது. வியாழக்கிழமை மாலையில் வெளியான எக்சிட் போல் முடிவுகளும், வெள்ளிக்கிழமை காலையில் வெளியான தேர்தல் முடிவுகளில் நாராயண மூர்த்தி மருமகன் ரிஷி சுனத் பெரும் தோல்வியைச் சந்தித்தார். இப்படி ஒரு வாரத்தில் மொத்த கதையும் நாராயண மூர்த்தி குடும்பத்தில் மாறியுள்ளது.
மேலும் பிரிட்டன் அரசியல் களத்தைப் பார்க்கும் போதும் அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சியும், லேபர் கட்சியும் மாறி மாறி 10-15 வருடங்களில் ஆட்சி செய்து வருகிறது. இப்படிப் பார்க்கும் போது 14 வருடத்திற்கு பின்று கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழக்கும் போதும் இதற்குக் காரணமாக ரிஷி சுனக் உள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த 10 வருடத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளது மட்டும் அல்லாமல் 3 பிரதமர்களை நியமித்துள்ளது. இதில் லிஸ் ட்ரஸ்-ன் சில மாத ஆட்சி காலம் மிகவும் மோசமாக இருந்தது, இதற்கு முன்பு இருந்த போரீஸ் ஜான்சன் பல பிரச்சனையில் சிக்கியிருந்தார். ரிஷி சுனக் ஆட்சிக் காலத்தில் தான் விமர்சனங்கள் குறைந்து காணப்பட்டது, ஆனாலும் மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சி மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications