மைசூரு: பிரபல ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தகுதி தேர்வுகளில் தோல்வி அடைந்த 240 டிரெய்னி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஃபிரஷர் நிலையில் ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு மைசூரில் இருக்கும் வளாகத்தில் பணி சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. பயிற்சி முடிந்த பிறகு அவர்களுக்கு இண்டர்னல் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த தேர்வில் தோல்வி அடைபவர்களை இன்போசிஸ் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி வருகிறது.

அந்த வகையில் ஏப்ரல் 18ஆம் தேதியிட்டு இன்போசிஸ் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இன்டர்னல் தேர்வில் தோல்வியடைந்த 240 நுழைவு நிலை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தான் இன்போசிஸ் நிறுவனம் 300க்கும் அதிகமான டிரெய்னி ஊழியர்களை இதே காரணத்திற்காக வேலையில் இருந்து நீக்கியது. அப்போது நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கூட இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த சூழலில் இன்போசிஸ் நிறுவனம் இரண்டு மாத காலத்திலேயே மேலும் 240 டிரெய்னொ ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி அதிர்ச்சியை தந்துள்ளது. இதனிடையே இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கும் நுழைவு நிலை ஊழியர்களுக்கு இலவசமாக அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்களை வழங்குவதாக இன்போசிஸ் தெரிவித்திருக்கிறது . NIIT மற்றும் Upgrad ஆகிய தளங்கள் வாயிலாக இவர்களுக்கு இலவசமாக Upskilling ப்ரோக்ராம்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஐடி நிறுவனங்களை பொறுத்தவரையில் தற்போது ஒரு நிச்சயமற்ற சூழலில் சிக்கி இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களே இதற்கு காரணம். இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் வருமானம் அமெரிக்க நிறுவனங்களையே சார்ந்து இருக்கிறது. தற்போது அமெரிக்காவிலேயே பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பதால் இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்போசிஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 0 முதல் 3 சதவீதமாக இருக்கும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது நிச்சயம் மற்ற பொருளாதார சந்தை ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணமாக இன்போசிஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த சூழலில் தான் நுழைவு நிலை ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்திருக்கிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் அனுப்பி இருக்கக்கூடிய மின்னஞ்சலில்" நீங்கள் உங்களின் இறுதி மதிப்பீட்டு தேர்வுக்கு தயாராக கூடுதலாக நேரம் தரப்பட்டது, 3 முறை தேர்ச்சி பெற வாய்ப்பு தரப்பட்டது. அப்படி இருந்தும் நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுகோல்களை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் , இந்த நிறுவனத்துடனான உங்களுடைய பயணம் இத்துடன் முடிவடைகிறது" என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனத்திலிருந்து உங்களை பணிநீக்கம் செய்தாலும் மேற்கொண்டு இந்த துறையில் நீங்கள் நிலைநிறுத்திக்கொள்ள ஏதுவாக வேறு நிறுவனங்களில் நீங்கள் வேலைவாய்ப்பு பெற உதவி செய்யும் வகையில் திறன்களை மேம்படுத்துவதற்கு இலவச வகுப்புகளை ஏற்பாடு செய்து தருகிறோம் எனவும் இன்போசிஸ் நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய இந்த ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளமும் மைசூரில் இருக்கும் பயிற்சி மையத்திலிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு தேவையான டிராவல் அலோவென்ஸும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications