இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இன்ஃபோசிஸ் (Infosys) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் அறக்கட்டளை (Infosys Foundation), வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.200 கோடி மதிப்பில் "இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு" என்ற வாழ்வாதாரத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
ஸ்பிரிங்போர்டு என்ற டிஜிட்டல் கற்றல் தளத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைத் தேடுபவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்தி தொழில்கள் மற்றும் வாழ்க்கைக்கான வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிதியாண்டில் (2025) ஏற்கனவே இத்திட்டம் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்களை பணியில் அமர்த்தியுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் கணிதம் மட்டுமின்றி, கலை, வர்த்தகம், சமூக அறிவியல் போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் துறை சார்ந்த பாடத்திட்டங்களும் இதில் இடம்பெற உள்ளன. இவை அனைத்தும் இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு என்ற ஆன்லைன் கற்றல் தளத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு நிரந்த வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி பாதைகளை உருவாக்கும் நோக்கில், இன்ஃபோசிஸ் அறக்கட்டளை, இருபதுக்கும் மேற்பட்ட செயல்பாட்டு கூட்டாளர்களுடன் (Implementation Partners) இணைந்து செயல்பட உள்ளது. அதன்படி, ICT Academy, Nirmaan Organization, Unnati Foundation, CII Foundation, NIIT Foundation, Centum Foundation, Magic Bus India Foundation, Aga Khan Rural Support Programme உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இணைந்து செயல்பட இருக்கிறது.
இந்த அமைப்புகள், துறை சார்ந்த பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் வழங்க உதவி புரிகின்றன. இது, இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு வாழ்வாதார திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இண்ஃபோசிஸ் அறக்கட்டளையின் இந்த முயற்சி பல்வேறு சமூக பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களுக்குப் புதிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு திட்டம் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சுமித் விர்மானி கூறுகையில், "இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு, தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட திறன்களை இளைஞர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். துறை சார்ந்த நிபுணர்களுடன் இணையும் வகையிலும், தொழிற்சார் பாடத்திட்டங்களில் முதலீடு செய்யும் வகையிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல், ஐ.சி.டி. அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் கூறுகையில், "ICT Academy கணிப்புப்படி, தொழில்துறையின் திறமையான பணியாளர் தேவையை பூர்த்தி செய்ய இன்ஃபோசிஸ் அறக்கட்டளை எடுத்துள்ள இந்த முயற்சி, மாணவர்களின் தொழில்துறை பயணத்திற்கு நம்பிக்கையும், நிலையான பயிற்சியும் அளிக்கிறது. இந்தியாவின் அடுத்த தலைமுறையை திறமையாக்கும் முயற்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை : இன்ஃபோசிஸ் அறக்கட்டளையானது 1996ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்ஃபோசிஸ் என்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனம் நிறுவிய சமூக நல நிறுவனமாகும். இந்த அறக்கட்டளை கல்வி, மருத்துவம், கலாசாரம், கிராமப்புற மேம்பாடு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது போன்ற துறைகளில் செயல்பட்டு வருகிறது. பள்ளி கட்டிடங்கள் மற்றும் கல்வி வசதிகள் அமைத்து கொடுத்தல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார முகாம்கள் நடத்துவது, கிராமப்புறங்களில் தரமான குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் செய்து கொடுப்பது, கலாசார விழாக்கள் மற்றும் பாரம்பரிய கலைகளை ஆதரிப்பது, இயற்கை வளங்கள் மற்றும் சூற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது.
More From GoodReturns

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications