இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்.ஆர்.நாராயணமூர்த்தி சமீபத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான லக்சரி பிளாட்டை பெங்களூரில் உள்ள கிங்ஃபிஷர் டவர்சில் வாங்கியுள்ளார். 16-வது மாடியில் அமைந்திருக்கும் இந்த பிரம்மாண்ட குடியிருப்பு 8,400 சதுர அடி பரப்பளவில் 4 அறைகள் மற்றும் 5 கார் பார்க்கிங் இடங்களுடன் பிரம்மாண்டமாக உள்ளது. இதில் உள்ள 3 பிளாக்குகளில் சுமார் 81 அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின் படி நாராயணமூர்த்தியின் மனைவியான சுதாமூர்த்தி 4 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ரூ.29 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இந்த கிங்ஃபிஷர் டவர்ஸ் விஜய் மல்லையாவின் பூர்வீக வீடு இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பயோகான் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான கிரண் மஜும்தார்-ஷா உட்பட பல்வேறு உரிமையாளர்கள் இங்கு பிளாட்டுகளை வாங்கியுள்ளனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பை நாராயணமூர்த்தி 50 கோடி கொடுத்து வாங்கிய செய்தி இணையத்தில் வெளியானது. இந்நிலையில் நெட்டிசன்கள் இவருடைய செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இதற்கு முன்னரே நாராயணமூர்த்தி ஒரு கருத்து தெரிவித்திருந்தார். ஒருவர் வாரத்திற்கு 70 மணி நேரம் ஆவது வேலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதனால் பல்வேறு சர்ச்சை கருத்துகளும் அப்போது எழுந்தது. இந்நிலையில் இவர் வாங்கிய வீடு குறித்தும் தற்போது சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளது. ஒரு X பயனர் நாராயணமூர்த்தி சொத்தை வாங்கியதற்கு பதிவு செய்வதற்காக 3 மணி நேரத்தை வீணடித்துள்ளார். இதனால் வாரத்தில் 67 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார் என்று கருத்து தெரிவித்திருந்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மேலும் 10 மணி நேரம் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்போதுதான் திரு.நாராயணமூர்த்தி அவர்கள் தனது பேரக்குழந்தைகளுக்காகவும் கிங்பிஷர் டவர்சில் மேலும் ஒரு பிளாட்டை வாங்க முடியும் என்று மற்றொரு பயனர் கிண்டலாக தெரிவித்திருந்தார்.
ரூ.50 கோடி கொடுத்து லக்சரி பிளாட்டை வாங்கிய நாராயணமூர்த்தி தான் மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என விரும்புகிறார் என்று மற்றொரு பையனார் கருத்து தெரிவித்திருந்தார். நாராயணமூர்த்தி கோடி கணக்கில் விலை கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருப்பது அவருடைய எளிமையான வாழ்க்கை முறை பற்றிய கருத்துக்கு முரணாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications