பெங்களூரில் சொத்து விலைகள் சற்று அதிகம் என்று பல்வேறு அறிக்கைகளின் மூலம் பார்த்தோம். அதற்கு உதாரணமாய் தற்போது 50 கோடி செலவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான என்.ஆர்.நாராயணமூர்த்தி பெங்களூரில் உள்ள கிங்பிஷர் டவர்ஸில் 2-வது பிளாட்டை வாங்கியுள்ளார். 16-வது மாடியில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு தோராயமாக 8,400 சதுர அடி பரப்பளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இங்கு 4 அறைகள் மற்றும் 5 கார் பார்க்கிங் இடங்கள் உள்ளது.
16-வது மாடியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு தோராயமாக 8,400 சதுர அடி பரப்பளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது, இங்கு 4 அறைகள் மற்றும் 5 கார் பார்க்கிங் இடங்கள் உள்ளது. இந்தப் பரிவர்த்தனை பெங்களூர் நகரின் வணிக மையங்களில் உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் மதிப்பை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஏனெனில் தற்போது இவர் வாங்கிய அப்பார்ட்மெண்டின் மதிப்பு ஸ்கொயர் ஃபீட் ஒன்றுக்கு 59,500 ரூபாய்.

யுபி சிட்டியில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் நகரத்தின் மையத்தில் உள்ள பகுதியாகும். இது ஒரு வணிக மையம் என்பதால் இங்கு சொத்து விலைகள் அதிகம். தற்போது நாராயண மூர்த்தி வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள 3 பிளாக்குகளில் சுமார் 81 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
ஒவ்வொரு குடியிருப்பும் 8,321 ஸ்கொயர் ஃபீட்டில் கட்டப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் பூர்வீக வீடு இருந்த இடத்தில் தான் இந்த கிங்ஃபிஷர் டவர்ஸ் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கிங்பிஷர் டவர்சில் உள்ள 41 லக்சரி அடுக்குமாடி குடியிருப்புகளை பிரஸ்டீஜ் நிறுவனம் சமீபத்தில் விற்பனை செய்தது. இந்த குடியிருப்புகள் ஒரு சதுர அடி 22,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பை வாங்கி வைத்திருந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடமிருந்து நாராயணமூர்த்தி இந்த பிளாட்டை வாங்கியுள்ளார். எழுத்தாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுதா மூர்த்தி 23-வது மாடியில் உள்ள லக்சரி குடியிருப்பில் ரூ.29 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதேபோல கிரண் மஜும்தார்-ஷா உட்பட சில முக்கியமான உரிமையாளர்களும் இந்தக் குடியிருப்பில் பிளாட் வாங்கியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜின் மகன் ராணா ஜார்ஜ், 35 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட் ஒன்றை இங்கு வாங்கினார்.


Click it and Unblock the Notifications