முதலில் இந்த ரூல்ஸ்-ஐ மாத்தணும்..! இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சொல்வதை கேளுங்க..!

இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தொழில் முனைவு குறித்தும் தொழில்களை மேம்படுத்துவது குறித்தும் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெறும்.

அந்த வகையில் அண்மையில் இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாராயணமூர்த்தி இந்தியாவின் கல்வி நிலையங்களில் உள்ள பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முதலில் இந்த ரூல்ஸ்-ஐ மாத்தணும்..! இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சொல்வதை கேளுங்க..!

இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்களுக்கு தற்போதுள்ள தொழில் முனைவோர்கள் தங்களது நன்கொடைகளை பங்குகளாக வழங்கும் வகையில் விதிகள் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலான தொழில் முனைவோர் பெரிய அளவிலான தொகையை கைகளில் வைத்திருக்க மாட்டார்கள், அவர்களிடம் பங்குகளே இருக்கும். எனவே கல்வி நிறுவனங்கள் பங்குகளை நன்கொடைகளாக பெற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்களை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

இந்த பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த நவீன காலத்தில் கூட ஒரு தொழில் முனைவோரால் பங்குகளை நன்கொடையாக வழங்க முடியாத சூழல் இந்தியாவில் தான் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு தொழில் முனைவோரும் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு திரும்ப செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் பெரிய அளவிலான தொகையை அவர்களால் வழங்க முடியாது அந்த மாதிரியான சமயங்களில் பங்குகளை வழங்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இன்ஃபோசிஸ் துணை நிறுவனரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் "அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களை பாருங்கள், எம்ஐடி, ஹார்வேர்ட், ஸ்டான்போர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான டாலர்களில் நன்கொடைகள் கிடைக்கின்றன.

ஆனால் இந்தியாவில் நம்முடைய பல்கலைக்கழகங்களும் நிதி நிறுவனங்களும் பெரும்பாலும் அரசின் நிதியை சார்ந்திருக்கின்றன .கல்லூரிகளில் தொழில்துறையின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் ,அதற்கு ஏற்ற வகையில் தொழில் துறையினர் பங்குகளை நன்கொடையாக வழங்கும் பொருட்டு மாற்றங்களை கொண்டு வருவது அவசியம்" என கூறியுள்ளார்.

முன்னதாக பேசிய நாராயணமூர்த்தி 1995ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி சுதாமூர்த்தி பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸுக்கு 4.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்க முயற்சி செய்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.

அப்பொழுது அந்த பணத்தை பங்குகளாக வாங்கி இருந்தால் தற்போது அதன் மதிப்பு 3000 கோடியாக உயர்ந்திருக்கும். ஆனால் இந்தியாவில் உள்ல விதிகள் பங்குகளை நன்கொடையாக வழங்குவதற்கு அனுமதிக்க வில்லை என தெரிவித்துள்ளார்.

1990களில் தன்னிடம் இருந்த பங்குகளை ஐஐடி கான்பூருக்கு நன்கொடையாக வழங்குவதற்கு தான் முயற்சி செய்ததை நினைவுகூர்ந்த நாராயணமூர்த்தி, "அந்த சமயத்தில் எங்கள் யாரிடமும் பணம் கிடையாது எங்களிடம் பங்குகள் மட்டுமே இருந்தன, நாங்கள் அதை வழங்க முயற்சித்தோம்.

ஆனால் கல்வி நிறுவனங்கள் அதை ஏற்கவில்லை பணம் மட்டுமே ஏற்போம் என தெரிவித்திருந்தனர். ஒருவேளை அவர்கள் பங்குகளை வாங்கி வைத்திருந்தால் இந்த நேரம் அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய்களாக உயர்ந்திருக்கும்" எனக் கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+