இன்போசிஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. 21 லட்சம் வரையில் சம்பள உயர்வு.. ஆட்டிப்போன ஐடி ஊழியர்கள்..!!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஏஐ அடிப்படையிலான சேவைகளை உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது மிகவும் முக்கியமான இலக்காக மாற்றியுள்ளது. இந்த நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களை டிரைனிங் செய்வதை தாண்டி, தற்போது புதிதாக பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களை ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களை அதிகம் தேடி தேடி பிடிக்கிறது.

இதன் அடுத்தகட்டமாக இன்போசிஸ் முக்கிய தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற பிரஷ்ஷர்களின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. ஆம் சிறப்பு தொழில்நுட்ப பணிகளில் நியமிக்கப்படும் திறன்வாய்ந்த பிரஷ்ஷர்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரை சம்பளம் வழங்க இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.

இன்போசிஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. 21 லட்சம் வரையில் சம்பள உயர்வு.. ஆட்டிப்போன ஐடி ஊழியர்கள்..!!

இது இந்திய ஐடி நிறுவனங்களில் பிரஷ்ஷர்களுக்கான அதிகபட்ச சம்பளம். AI அடிப்படையிலான சேவைகளை வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டிஜிட்டல் திறன் கொண்ட இளைஞர்களை ஈர்க்க இன்போசிஸ் அதிகப்படியான சம்பளத்தை கொடுக்க முன்வந்துள்ளது. இன்போசிஸ் குழுமத்தின் மனிதவள பிரிவு தலைவர் ஷாஜி மாத்யூ இதை உறுதிப்படுத்தினார்.

இன்போசிஸ் நிறுவனம் தற்போது இன்ஜினியரிங், கம்பியூட்டர் சையின்ஸ் பட்டதாரிகளுக்கு ஆப்-கேம்பஸ் இன்டர்வியூவ் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இன்டர்வியூவ்-ல் ஐஐடி முதல் சிறிய கல்லூரிகளில் இருக்கும் அனைவருக்குமான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த ஆப்-கேம்பஸ் இன்டர்வியூவ்-ல் தேர்வு செய்யப்படும் சிறப்பு திறன் கொண்ட பட்டதாரிகளுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படும். ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் L3 (ட்ரைனி) பணிக்கு ரூ.21 லட்சம், L2க்கு ரூ.16 லட்சம், L1க்கு ரூ.11 லட்சம், டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (ட்ரைனி) பணிக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தை வழங்குகிறது.

இந்த ஆப்-கேம்பஸ் இன்டர்வியூவ்-ல் BE, BTech, ME, MTech, MCA, இன்டக்ரேட்டட் MSc பட்டதாரிகள் கலந்துக்கொள்ள முடியும், இதேபோல் கம்பியூட்டர் சையின்ஸ், ஐடி, ECE, EEE போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

பல ஆண்டுகளாக ஐடி நிறுவனங்களில் பிரஷ்ஷர்களுக்கான சம்பளம் மிகவும் குறைவாக இருந்தது வருவது பெரும் விமர்சனமாக பார்க்கப்படும் வேளையில் பிரஷ்ஷர்களுக்கு 21 லட்சம் வரையில் சம்பளம் அளிக்கப்படும் செய்தி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிறப்பு திறன் அல்லாத பிரஷ்ஷர்களுக்கு வழக்கம் போல் 3-4 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தை மட்டுமே இன்போசிஸ் அளிக்கும்.

இந்திய ஐடி நிறுவனங்களின் CEO சம்பளம் பல மடங்கு உயர்ந்த போதும் பிரஷ்ஷர்களுக்கான சம்பளம் பல வருடங்களாக 2.5-4 லட்சம் ரூபாய் மட்டத்திலேயே உள்ளது. ஆனால் சிறப்பு திறன் கொண்டவர்களுக்கு பல ஆண்டுகளாக கூடுதல் சம்பளம் அளிக்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

இன்போசிஸ் 21 லட்சம் வரையில் பிரஷ்ஷர்களுக்கு சம்பளம் அளிக்க தயாராகியிருக்கும் வேலையில் மற்ற ஐடி நிறுவனங்களின் நிலை என்ன என்பதையும் பார்க்க வேண்டாமா..? TCS நிறுவனம் டிஜிட்டல், பிரைம் திட்டங்களில் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சமும், HCLTech உயர் திறன் கொண்டவர்களுக்கு மற்ற பிரஷ்ஷர்களை தாண்டி 4 மடங்கு அதிக சம்பளத்தையும் அளித்து வருகிறது. விப்ரோ டர்போ திட்டத்தில் ரூ.6.5 லட்சம் வரை சம்பளம் அளிக்கிறது.

இன்போசிஸ் 2025-2026 நிதியாண்டு முதல் 6 மாதத்தில் 12,000 பிரஷ்ஷர்களை நியமித்துள்ளது, இந்நிறுவனத்தின் வருடாந்திர இலக்கு 20,000. இன்போசிஸ்-ன் மொத்த ஊழியர் எண்ணிக்கை 3,31,991 ஆக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+