Infosys-ஐ புகழ்ந்து தள்ளும் பெரிய தலைகள்.. டெல்லியில் அப்படி என்ன தான் நடந்தது?! நந்தன் நிலேகனி செய்த மேஜிக்

ஏஐ தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி இந்திய ஐடி துறையை பாதிக்கும் என்ற அச்சம் நிலவும் நிலையில், தொழில்நுட்ப முதலீட்டாளரும் பில்லியனருமான வினோத் கோஸ்லா இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளார்.

இந்தியா ஏஐ இம்பேக்ட் சம்மிட்டில் பேசிய அவர், இன்போசிஸ் உலக அளவில் பெரிய ஏஐ சேவை நிறுவனமாக மாற வேண்டும் என்று தான் விருப்புவதாக தெரிவித்தார். ஏஐ மூலம் இந்திய ஐடி சேவை துறைக்கு பெரும் ஆபத்து என எச்சரிக்கை விடுத்த வினோத் கோஸ்லா, இன்போசிஸ் மீது நம்பிக்கை வைக்க என்ன காரணம்..? இன்போசிஸ் நந்தன் நிலேகனி பேசியது தான் வினோத் கோஸ்லா-வின் இந்த பேச்சுக்கு முக்கியமான காரணம்.

Infosys-ஐ புகழ்ந்து தள்ளும் பெரிய தலைகள்.. டெல்லியில் என்ன தான் நடந்தது? நந்தன் நிலேகனி செய்த மேஜிக்

நந்தன் நிலேகனி
இன்போசிஸ் இணை நிறுவனரும், தலைவருமான நந்தன் நிலேகனி, பிப்ரவரி 17 அன்று நடைபெற்ற இன்போசிஸ் இன்வெஸ்டர் ஏஐ டேயில் பேசியபோது, ஏஐ தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கும், நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் வேகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது என்று விளக்கினார்.

இந்த இடைவெளி, ஐடி சேவை நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்பாக மாறும் என்று அவர் கூறினார். ஏஐ தொழில்நுட்பத்தை நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கு உதவுவது, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் பலமாக இருக்கும். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வினோத் கோஸ்லா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏஐ எளிதாக தோன்றலாம் ஆனால் எல்லாவற்றையும் எளிதில் செயல்படுத்த முடியாது, ஏனெனில் பலருக்கு ஏஐ புரியவில்லை என்பதையும் வினோத் கோஸ்லா உறுதி செய்தார். இந்த இடத்தில் தான் இன்போசிஸ், டிசிஎஸ் புதிய வர்த்தக வாய்ப்பை பார்க்கிறது.

வினோத் கோஸ்லாவின் நம்பிக்கை
இதை தொடர்ந்து இந்தியா ஏஐ இம்பேக்ட் சம்மிட்டில் வினோத் கோஸ்லா பேசிய போது: "இன்போசிஸ் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மேற்கத்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் வேளையில், இந்நிறுவனம் விரைவில் ஏஐ சேவை நிறுவனமாக மாற வேண்டும் என்று நம்புகிறேன். பழைய வாய்ப்புகள் அழியும் போது புதிய வாய்ப்புகள் உருவாகின்றன என தெரிவித்தார்".

கோஸ்லா வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான வினோத் கோஸ்லா, ஓபன்ஏஐ, சர்வம் போன்ற ஏஐ நிறுவனங்களின் திறனை ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்து முதலீடு செய்த முக்கியமான நபர்களில் ஒருவர்.

மொத்தத்தில், வினோத் கோஸ்லாவின் கருத்து ஐடி துறைக்கு எச்சரிக்கையுடன் நம்பிக்கையையும் அளிக்கிறது. பழைய வர்த்தக வழிகளை விட்டு ஏஐ சார்ந்த புதிய வணிக மாதிரிகளுக்கு மாற வேண்டும். இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, ஏஐ ஏற்றுமதியில் முன்னிலை வகிக்க முடியும்.

Anthropic - Infosys கூட்டணி
அந்த்ரோபிக் (Anthropic) மற்றும் இன்போசிஸ் (Infosys) நிறுவனங்கள் தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்ற நிறுவன அளவிலான ஏஐ சேவைகளை உருவாக்க இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த கூட்டணி மூலம் இன்போசிஸ் ஏஐ சேவையை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த போவது உறுதியானது, இதனால் வாயிலாக 2 நாட்களாக இன்போசிஸ் பங்குகள் உயர்ந்து வருகிறது.

இந்த கூட்டாணி மூலம் அந்த்ரோபிக் நிறுவனத்தின் Claude மாடல்கள் மற்றும் Claude Code தொழில்நுட்பம், இன்போசிஸின் AI சேவைத் தளம் Topaz உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் மென்பொருள் மேம்பாட்டை வேகமாக செய்யவும், கட்டுப்பாடுகள் நிறைந்த துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகளுடன் ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும் முடியும்.

இன்போசிஸ் பங்கு விலை
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்கு விலை 2.70 சதவீதம் குறைந்து 1352 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 2026ல் மட்டும் இன்போசிஸ் பங்குகள் சுமார் 17.11 சதவீதம் சரிந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+