25 வருடத்தில் 688 மடங்கு லாபம்.. முதலீட்டாளர்களின் செல்லப்பிள்ளை இன்போசிஸ் அசத்தல்..!

இந்தியாவின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கடந்த 25 வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அளவிலான லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை கடந்த 25 வருடத்தில் கார்கில் போர், டாட் காம் பபிள், பொருளாதார நெருக்கடி, ஆட்சி மாற்றங்கள், கொரோனா எனப் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சிறந்த மற்றும் அதிக லாபம் அளிக்கக் கூடிய சந்தையாக விளங்குகிறது.

25 வருடப் பயணம்

25 வருடப் பயணம்

இந்திய பங்குச்சந்தையில் 25 வருடப் பயணத்தைக் குறித்து மோதிலால் ஆஸ்வல் பைனான்ஸ் சர்வீசஸ் ஒரு முக்கிய ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி கடந்த 25 வருடத்தில் அதாவது 1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பங்குச்சந்தையில் வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாக இன்போசிஸ்-ஐயும், மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐயும் அறிவித்துள்ளது.

 இன்போசிஸ் மாஸ்

இன்போசிஸ் மாஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை இந்த 25 வருட காலத்தில் கொடுத்துள்ளது. 1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியுடன் வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது.

688 மடங்கு வளர்ச்சி

688 மடங்கு வளர்ச்சி

இந்தக் காலகட்டத்தில் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 688 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 1995ல் நீங்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 6.88 கோடி ரூபாய்.

இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெறும் 300 கோடி ரூபாயில் இருந்து 2.73 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இன்போசிஸ் வருடத்திற்கு 30 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இந்தக் காலகட்டத்தில் வருடம் 9.2 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்செக்ஸ் 1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 3,20 புள்ளிகளில் இருந்து 47055.69 வரையிலான உயர்வை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 25 வருட வர்த்தகத்தில் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமான விளங்குகிறது.

சுமார் 6.3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டுக்கு உயர்ந்துள்ள ரிலையன்ஸ், 2015 முதல் 2020ஆம் ஆண்டுக் காலத்தில் மட்டும் சுமார் 4.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 நிறுவனங்கள்

டாப் 10 நிறுவனங்கள்

1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனங்கள் பட்டியலில் டாப் 10 இடத்தைப் பிடித்த நிறுவனங்கள். இன்போசிஸ் ( 688 மடங்கு வளர்ச்சி), பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ( 258 மடங்கு வளர்ச்சி), எய்ச்சர் மோட்டார்ஸ் ( 255 மடங்கு வளர்ச்சி), ஸ்ரீ சிமெண்ட் ( 240 மடங்கு வளர்ச்சி), பெர்ஜர் பெயின்ட்ஸ் (239 மடங்கு வளர்ச்சி), ஹனிவெல் ஆட்டோ ( 219 மடங்கு வளர்ச்சி), பஜாஜ் பைனான்ஸ் (172 மடங்கு வளர்ச்சி), மதர்சன் சுமி (161 மடங்கு வளர்ச்சி), பிரிட்டனானியா இண்டஸ்ட்ரீஸ் (142 மடங்கு வளர்ச்சி).

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+